ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் ஏறக்கூடாதா? நீங்க தாராளமா இந்த சிற்றுண்டியை நைட்ல சாப்பிடலாம்

Best late night snacks for weight loss: உடல் எடையைக் குறைக்கவும், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் சில ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். இதில் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சில சிற்றுண்டி ரெசிபிகள் பயனளிக்கும். இதில் எடை குறைய மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய சிற்றுண்டிகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் ஏறக்கூடாதா? நீங்க தாராளமா இந்த சிற்றுண்டியை நைட்ல சாப்பிடலாம்


Best midnight snacks for weight loss: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையும் அடங்கும். ஆனால், உடல் எடையிழப்பு காலத்தில் எவராலும் சிற்றுண்டி சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த இயலாததாக இருக்கலாம். எடையிழப்பு பயணத்தில் சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதற்கு பல்வேறு ஆரோக்கியமற்ற எண்ணெய் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இது உடல் எடை அதிகரிப்பு வழிவகுப்பதுடன், எடையிழப்பை ஆதரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

எனினும், சில நள்ளிரவு சிற்றுண்டிகள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நள்ளிரவு சாப்பிடுவது பெரும்பாலும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யலாம். இது உடல் எடையைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், தசை பழுதுபார்ப்பை ஆதரிக்கவும் உதவுகிறது. இது வளர்சிதை மாற்றம் இரவில் மெதுவாக இருப்பதைத் தடுக்கிறது. இந்த சிற்றுண்டிகள் அடுத்த நாள் அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வேர்க்கடலை சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.? ஸ்டாக் வச்சிக்கோங்க மக்களே..

வளர்ச்சிதை மாற்றம் மற்றும் எடையிழப்பை ஆதரிக்க உதவும் சிறந்த நள்ளிரவு சிற்றுண்டிகள்

ஆரோக்கியமான உணவை அதிகமாக சாப்பிடுவது கூட வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கலாம். எனவே, பகுதி அளவு சாப்பிடுவது நல்லது. இதில் நல்ல வளர்ச்சிதை மாற்றத்தை பராமரிக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய சிறந்த நள்ளிரவு சிற்றுண்டிகளைக் காணலாம்.

பாதாம் அல்லது வால்நட்ஸ்

ஒரு கைப்பிடி அளவிலான புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பாதாம் அல்லது வால்நட்ஸ் போன்றவை சாப்பிடலாம். இவை அனைத்தும் திருப்தியாக வைக்க உதவுகிறது. இது இரவு நேர இரத்த சர்க்கரை வீழ்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக, இதில் உள்ள மெக்னீசியம் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறைக்கு இது மிகவும் முக்கியமானதாகும்.

பாலாடைக்கட்டி

இதில் அதிகளவு புரதம் மற்றும் குறைந்தளவிலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது ஒரே இரவில் ஏற்படும் தசை முறிவைத் தடுக்க ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது. மேலும், இதில் உள்ள புரதம் மெதுவாக செரிமானம் அடைவதால், தூங்கும் போது வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், அதிகாலை பசியைக் கட்டுப்படுத்துகிறது.

வேகவைத்த முட்டை

ஒரு எளிய வேகவைத்த முட்டை உயர்தர புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன், மிகக் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, வளர்ச்சிதை மாற்றம் குறைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இது தசை வெகுஜனத்தைப் பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, சுறுசுறுப்பாக இருந்தால் அல்லது எடையிழப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

வேர்க்கடலை வெண்ணெயுடன் வாழைப்பழம்

வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் இயற்கை கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டதாகும். அதே சமயம், வேர்க்கடலை வெண்ணெய் புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டுள்ளது. இந்த இரண்டின் கலவையானது தசைகளை தளர்த்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் மற்றும் உடலில் அதிக சுமை இல்லாமல் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எப்போதும் ஆற்றலுடன் இருக்க இந்த உணவுகளை சாப்பிடவும்..

சியா புட்டிங்

பாதாம் பால் மற்றும் சியா விதைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் சியா புட்டிங் ஆனது நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்ததாகும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி, விரிவடைந்து, செரிமானம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரவும் வழிவகுக்கிறது.

பெர்ரிகளுடன் கிரேக்க தயிர்

கிரேக்க தயிரில் உள்ள கேசீன் புரதம் மெதுவாக ஜீரணமாகி, ஒரே இரவில் தசைகளை சரிசெய்ய உதவுகிறது. பெர்ரி பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது. இது இன்சுலின் அதிகரிக்காமல் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

புரத ஸ்மூத்தி

தாவர அடிப்படையிலான புரத பவுடர், பாதாம் பால் மற்றும் சிறிது ஆளிவிதை அல்லது கீரை சேர்த்து இந்த ஸ்மூத்தி தயார் செய்யப்படுகிறது. இது ஒரு சிறந்த இரவு நேர சிற்றுண்டியாக இருக்கலாம். இது லேசான உணர்வைத் தருவதுடன், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது தூக்கம் அல்லது செரிமானத்தில் தலையிடாமல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

ஓட்ஸ் மற்றும் இலவங்கப்பட்டை

ஒரு சிறிய கிண்ணத்தில் உள்ள ஓட்ஸ் ஆனது நார்ச்சத்துக்கள் மற்றும் இரத்த சர்க்கரையை நிலைப்படுத்தும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. அதே சமயம், இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை சீராக்க உதவுகிறது. இது மெதுவாக செரிமானம் அடையும் மற்றும் இரவு முழுவதும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கும் ஒரு சூடான, திருப்திகரமான சிற்றுண்டியாக அமைகிறது.

இந்த வகை இரவு நேர சிற்றுண்டிகளின் உதவியுடன் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தலாம். படுக்கைக்குச் செல்வதற்கு முன் பசி எடுத்தால், இந்த உணவுகளை ஒரு சிற்றுண்டியாகச் சேர்த்துக் கொள்வது வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும். 

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Night foods for weight loss: எடையை மாஸ் வேகத்தில் குறைக்க இரவில் நீங்க என்ன சாப்பிடணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

எடை இழப்பு பயணத்தை எளிதாக்க,.. இந்த நுட்பங்களைப் பின்பற்றுங்கள்..

Disclaimer