Low Calorie Dinner: கம்மி விலையில் எடை குறைக்க உதவும் கம்மி கலோரி இரவு உணவுகள்

உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடைக்கும் இரவு உணவுக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இவை இரண்டிற்கும் பலனளிக்கும் குறைந்த கலோரி கொண்ட இரவு உணவுகளை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Low Calorie Dinner: கம்மி விலையில் எடை குறைக்க உதவும் கம்மி கலோரி இரவு உணவுகள்


மதிய உணவை விட காலை உணவும் இரவு உணவும் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் எடைக்கும் மிக மிக முக்கியமாகும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இரவில் லேசாகவும், காலையில் கொஞ்சம் கனமாகவும் சாப்பிட வேண்டும். ஆனால் இரவு உணவு லேசானது என்ற பெயரில், பெரும்பாலான மக்கள் இரவு உணவிற்கு என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பமடைகிறார்கள்.

நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவைப் பொறுத்தவரை அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்களால் உணவைத் தவிர்க்கவோ அல்லது அவர்கள் விரும்பியதைச் சாப்பிடவோ முடியாது. அதேபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரவில் உணவைத் தவிர்ப்பது என்பது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசியுடன் வைத்திருக்கும் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் கெடுக்கக்கூடும். அதேபோல், நீரிழிவு நோயாளிகள் இரவில் உணவு சாப்பிடாமல் தூங்கினால், காலையில் அவர்களின் இரத்த சர்க்கரை சமநிலையற்றதாகிவிடும்.

மேலும் படிக்க: Liver Detox Drinks: இரண்டே வாரங்களில் கல்லீரல் கொழுப்பை துடைச்சி எடுக்க... இந்த பானங்களைக் குடியுங்கள்...!

டாப் 5 குறைந்த கலோரி இரவு உணவுகள்

இவர்களுக்கு மட்டுமல்ல அனைவரும் இரவு உணவில் கவனமாக இருக்க வேண்டும். அதன்படியான குறைந்த கலோரி இரவு உணவுகளை பார்க்கலாம்.

Kali (17)

காளான்கள்

  • 100 கிராம் காளானில் 22 கலோரிகள் மட்டுமே உள்ளன.
  • இது நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
  • காளானில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
  • அவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன.

இது தவிர, இதில் அதிக அளவு புரதமும் உள்ளது, இது வயிற்றை நிரப்பி எடையைக் கட்டுப்படுத்துகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சாலையோர கடைகளில் விற்கும் காளான்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு அது நல்லது என கருத வேண்டாம். காரணம், அது காளானே இல்லை, காளான் கடையில் வாங்கி நீங்களே வீட்டில் சமைப்பது நல்லது. கடையில் காளான் வாங்கினால் அது பெரும்பாலும் முழுமையாக இருக்கும் அதன்மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ப்ரோக்கோலி

  • ப்ரோக்கோலியில் 100 கிராமுக்கு 34 கலோரிகள் மட்டுமே உள்ளன.
  • நீங்கள் இதை இரவில் காய்கறியாகவோ அல்லது சாலடாகவோ சாப்பிடலாம்.
  • ப்ரோக்கோலியின் நன்மைகள் பற்றிப் பேசுகையில், ப்ரோக்கோலியில் கரோட்டினாய்டுகள் உள்ளன, அவை இதய தமனிகளை ஆரோக்கியமாக்குகின்றன.
  • இது இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கிறது.

கேரட்

100 கிராம் கேரட்டில் 41 கலோரிகள் உள்ளன. நீங்கள் கேரட்டை சாலடாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடலாம். இது கொழுப்பைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவை சரிசெய்கிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Kali (15)

தயிர்

100 கிராம் கொழுப்பு இல்லாத தயிரில் 59 கலோரிகள் உள்ளன. நீங்கள் இதை உணவுக்குப் பிறகு சாப்பிடலாம் அல்லது எந்த செய்முறையிலும் பயன்படுத்தலாம்.

ஆப்பிள்கள்

ஒரு கப் (125 கிராம்) ஆப்பிள் துண்டுகளில் 57 கலோரிகளும், சுமார் மூன்று கிராம் உணவு நார்ச்சத்தும் உள்ளது. ஆப்பிள்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். இது தவிர, ஆப்பிள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: ரத்த சோகையை இயற்கையான முறையில் விரட்டியடிக்க, இந்த ஜூஸ்களை தினமும் குடிங்க..!

பீட்ரூட்

100 கிராம் பீட்ரூட்டில் 43 கலோரிகள் உள்ளன, உணவின் இறுதியில் அதை சாப்பிடுவது வயிற்றை நிரப்ப உதவுகிறது. இது கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளில் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

image source: freepik

Read Next

Weight Loss Tips: சாப்பிட்ட பிறகு இந்த தவறுகளை செய்தால் கொஞ்சம் கூட உங்க எடை குறையாது!

Disclaimer