What to eat at night to lose belly fat: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் எடை அதிகரிப்பு பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் எடையிழப்புக்கான இலக்குகளை அடைய பலரும் ஜிம்மிற்கு செல்வது மற்றும் இன்னும் பல்வேறு முறைகளைக் கையாள்கின்றனர். அதன் படி, உடல் எடையைக் குறைக்க, குறிப்பாக தொப்பை கொழுப்பைக் குறைக்க சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும்.
ஏனெனில் அதிகரிக்கும் தொப்பைக் கொழுப்பு நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே தொப்பைக் கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பகல், இரவு என எந்த காலமாக இருந்தாலும், உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். சிலர், வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு இரவு உணவை முழுவதுமாக தவிர்ப்பது சிறந்த வழி அல்ல. ஏனெனில் இரவு உணவைத் தவிர்ப்பதால் அடுத்த நாள் காலையில் பசியுடன் எழுந்திருக்க விரும்ப மாட்டார்கள். இதனால் அதிகம் சாப்பிடுவர். இதில் தொப்பையைக் குறைக்க இரவில் என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Weight Loss: உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் போதும்.. ஆனா இப்படி சாப்பிடுங்க!
தொப்பைக் கொழுப்பை ஏன் அகற்ற வேண்டும்?
தொப்பையைக் குறைப்பதற்கு இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக, தொப்பைக் கொழுப்பை ஏன் குறைக்க வேண்டும்? அது ஏன் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதியைச் சுற்றி சேமிக்கப்படும் கூடுதல் கொழுப்பானது தொப்பைக் கொழுப்பு ஆகும். உடல் செயல்பாடு இல்லாமை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், அதிக சர்க்கரை உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றவை வயிற்று கொழுப்புக்கான காரணங்களாகும். வயிற்றுக் கொழுப்பு பொதுவாக நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணிகளாக அமைகிறது. இதைக் குறைப்பதன் மூலம் நோய் அபாயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தொப்பையைக் குறைக்க இரவில் சாப்பிட வேண்டியவை?
கீரை, வெண்ணெய் பழம் சாலட்
வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், கீரையில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவிலான மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
தேவையானவை
- கீரை - 1 கப்
- ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- வெண்ணெய் பழம் - 1/2 கப்
- எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாத்திரம் ஒன்றில் கீரை இலைகளை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் அவகேடோ துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
வேகவைத்த ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும், கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேவையானவை
- ப்ரோக்கோலி - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப்ரோக்கோலியை ஒரு ஸ்டீமரில் வைத்து 5-7 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். இதில் சுவைக்காக உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய டிப்ஸ்.!
கெமோமில் டீ
கெமோமில் பூக்களில் பாலிஃபீனாலிக் கலவைகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கும் விளைவுகள் உள்ளது. ஆய்வு ஒன்றில் கெமோமில் டீ அருந்துவது உடல் எடை குறைப்புக்கு மிகவும் பயனளிக்குகிறது.
தேவையானவை
- கெமோமில் தேநீர் பேக் - 1
- சூடான நீர் - 1 கப்
செய்முறை
முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஒரு கப்பில் ஊற்ற வேண்டும். இதில் கெமோமில் டீ பேக்கை 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். பின், தயார் செய்யப்பட்ட கெமோமில் டீயை அருந்தலாம்.
சியா விதை புட்டு
சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
தேவையானவை
- சியா விதைகள் - 2 தேக்கரண்டி
- பாதாம் பால் - 1 கப்
செய்முறை
கிண்ணம் ஒன்றில் சியா விதைகள் மற்றும் பாதாம் பால் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இதைக் கட்டிகள் வராமல், நன்கு கிளறி குறைந்தது 2 மணி நேரம் குளிரூட்டலாம். இப்போது சுவையான சியா விதை புட்டு தயார் செய்து அருந்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Breakfast: எடை குறைய காலை உணவாக இவற்றை சாப்பிடவும்..
Image Source: Freepik