Night yoga poses for weight loss: இன்று பலரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவற்றால் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகப்படியான பரபரப்பான அட்டவணைகளால், உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே அனைவருக்கும் கஷ்டமாகத் தெரியலாம். இது போன்ற சூழ்நிலைகளில் இரவு தூங்கும் போது உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
யோகா பயிற்சி செய்யும் போது எடையைக் குறைக்க நிறைய ஆசனங்கள் உள்ளன. அதே எடையைக் குறைக்க நேரம் இல்லாதவர்கள் கிடைக்கும் நேரத்தில் சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு இரவில் தூங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய யோகாசனங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், நல்ல தூக்கத்தையும் தருகிறது. இதில் எடையைக் குறைக்க இரவு தூங்கும் முன்னதாக நாம் செய்ய வேண்டிய சில யோகாசனங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த ஒரு எக்ஸர்சைஸ் மட்டும் பண்ணுங்க! தொப்பைக் கொழுப்பு இருந்த இடமே தெரியாம போய்டும்
எடையிழப்புக்கு தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்
பத்த கோணாசனம் (Butterfly Pose)
இந்த ஆசனம் செய்ய முதலில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இப்போது முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இந்நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு இரு கால்களை மடக்கிக் கொண்டு, கால் பாதங்கள் இரண்டும் ஒன்றாக ஒட்டிய நிலையில், கைகளால் கால் பாதங்களை பிடித்து கொள்ளலாம். இந்நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
குறிப்பாக கால் முட்டிகள் தரையை தொடாமல் இருக்க வேண்டும். இதற்கு முதலில் தொடைகளை தரையில் தாழ்த்தினால் கால் முட்டிகள் சமநிலையில் இருக்கும். இப்போது இரண்டு கால்களையும் மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இந்த நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை இருந்து, அதன் பிறகு, மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரலாம்.
முக்கிய கட்டுரைகள்
மர்ஜரியாசனம் பிட்டிலாசனம் (Cat-cow pose)
இந்த ஆசனத்தில் முதலில் கைகள் மற்றும் முழங்கால்களில் தாங்கி, மணிக்கட்டுகள் தோள்களுக்குக் கீழும், முழங்கால்கள் இடுப்புக்குக் கீழ் நேரடியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் தலையை மேல்நோக்கி கொண்டு வரும்போது, இடுப்பை பசு போல சாய்த்து, ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும். பிறகு, ஆழமாக மூச்சை இழுத்து வயிற்றை உள்ளே கொண்டு வரலாம்.
இதில் முதுகெலும்பை வளைத்து, தலை மற்றும் இடுப்பை "பூனை" போல கீழே கொண்டு வர வேண்டும். இதை பல முறை செய்யலாம். சுமார் 10-15 சுவாச சுழற்சிகளுக்கு அல்லது உங்கள் வசதிக்கேற்ப வரிசையை மீண்டும் செய்யலாம்.
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half spinal twist pose)
இந்த ஆசனம் செய்ய கால்களை நேராக நீட்டி, கால்களை ஒன்றாக இணைத்து, முதுகெலும்பை நிமிர்ந்து வைத்து உட்கார வேண்டும். பிறகு இடது காலை வளைத்து, இடது பாதத்தின் ஹீலை வலது இடுப்புக்கு அருகில் வைக்க வேண்டும். பின், வலது காலை இடது முழங்காலுக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும். இடது கையை வலது முழங்காலில் வைத்து, வலது கையை பின்னால் வைத்துக் கொள்ளலாம்.
இதில் இடுப்பு, தோள்கள், கழுத்தை வலது பக்கம் திருப்பி, வலது தோள்பட்டைக்கு மேல் பார்க்க வேண்டும். இந்நிலையில் முதுகெலும்பை நிமிர்ந்து வைத்திருக்க வேண்டும். மூச்சை வெளியே விட்டு, முதலில் வலது கையை விடுவித்து, இடுப்பை விடுவித்து பிறகு மார்பு, இறுதியாக கழுத்து ஆகியவற்றை விடுவித்து, நிதானமாக நேராக உட்காரலாம். இதை மறுபுறம் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for weight loss: வெறும் 15 நாளில் உடல் எடையை குறைக்க வீட்டிலேயே இந்த யோகாவை செய்யுங்க!
பாலாசனம் (Child pose)
இது மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தளர்வை ஏற்படுத்தும் முக்கியமான யோகாசனமாகும். இது கீழ்முதுகில் உள்ள பதற்றத்தை விடுவித்து எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி பிட்டத்தின் மீது உட்கார வேண்டும். இப்போது கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணைந்து இருக்க வேண்டும்.
பிறகு மூச்சை உள்ளிழுக்குமாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்க வேண்டும். பின்பு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். இப்போது நெற்றியானது தரையைத் தொட வேண்டும். இந்நிலையில் பிட்டத்தைத் தூக்கக் கூடாது. இந்நிலையில் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே 2-3 நிமிடங்கள் இருக்கலாம். பிறகு பழைய நிலைக்குத் திரும்பி விடலாம். இவ்வாறு 5-10 முறை செய்யலாம்.
சேதுபந்தாசனம் (Bridge pose)
சேதுபந்தாசனம் உடல் எடையிழப்புக்கு சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் செய்ய முதலில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கால்களை முழங்கால்களிலிருந்து வளைத்து, கால்களை இடுப்பு அகலமாக வைக்க வைக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்து, இடுப்பை மேல்நோக்கி உயர்த்தி, பாதங்கள் தாங்கியவாறு வைக்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளியிட்டு இடுப்பை மீண்டும் தரையில் இறக்கலாம். இந்த இயக்கத்தை 10 முறை செய்யலாம். இதை 1 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Aerial Yoga: ஏரியல் யோகா செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Image Source: Freepik