Easiest Way for a Woman to Lose Belly Fat in tamil: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தொப்பைக் கொழுப்பு பிரச்சனை பொதுவானதாக மாறிவிட்டது. பெண்களிடையே காணப்படக்கூடிய இந்த பிரச்சனைக்கு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது போன்றவை முக்கிய காரணமாக அமைகிறது. உடல் எடை அதிகரிப்பது பெண்களுக்கு பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்பு ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலில் இன்சுலின் உணர்திறன் குறைவாக இருக்கும் போது, உடலில் உள்ள ஆற்றல் சரியாகப் பயன்படுத்தப்படாமல் போகிறது. இதன் காரணமாக, உணவு மெதுவாக கொழுப்பு வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது. இது பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல், நீரிழிவு, தைராய்டு, இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது தவிர, இவை PCOS போன்ற பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம். எனவே, பெண்கள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்ற.. அருமையான ஆயுர்வேத குறிப்புகள்..
தொப்பைக் கொழுப்பு
பொதுவாக பெண்கள் தங்கள் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது என்று மிகவும் கவலைப்படுகின்றனர். சில முயற்சிகளால் உடலின் மற்ற பாகங்களின் எடை எளிதில் குறைவதை பல நேரங்களில் காண முடியும். ஆனால் வயிற்றின் பிடிவாதமான கொழுப்பு குறைவது கடினமாக இருக்கும். இந்நிலையில், பெண்கள் பெரும்பாலும் மிகவும் ஏமாற்றமடைகின்றனர். இதில் பெண்கள் தங்கள் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த சிறந்த தகவல்களைப் பெற, மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி காண்போம்.
பெண்கள் தொப்பையை குறைப்பது எப்படி?
உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்களின் கூற்றுப்படி, “ஆண்களை விட பெண்களுக்கு தொப்பையைக் குறைப்பது சற்று கடினமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கான எடை இழப்பு முறைகள் வேறுபட்டவை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. எடை குறைக்க சில விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் தொப்பையை எளிதாகக் குறைக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
உடற்பயிற்சி செய்வது
உடல் எடையை குறைக்க உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு ஜிம்மிற்குச் சென்று பயிற்சி செய்யலாம் அல்லது யோகா பயிற்சி செய்யலாம். எளிய முறையாக 30-40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். ஆனால், உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது உடலிலிருந்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவை உண்ணுவது
உணவில் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை என்றாலும், அதிக புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக்க வேண்டும். அதாவது சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, ரொட்டி அல்லது சாதத்திற்கு பதிலாக, அதிகளவு காய்கறிகள், பழங்கள், சாலட்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: சாப்பிட்ட பிறகு இந்த தவறுகளை செய்தால் கொஞ்சம் கூட உங்க எடை குறையாது!
வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது
காலையில் எழுந்தவுடன் முதலில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க முயற்சிக்க வேண்டும். இது தவிர, நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளலாம். இவ்வாறு வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலிலிருந்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், இவை செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
மூலிகை தேநீர் குடிப்பது
உணவு உட்கொண்ட 10-15 நிமிடங்களுக்குப் பிறகு மூலிகை தேநீர் குடிக்கலாம். இதற்கு கிரீன் டீ, கெமோமில் டீ, சீரகம் அல்லது பெருஞ்சீரகம் டீ அல்லது இலவங்கப்பட்டை டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளைத் தேர்வு செய்யலாம். இந்த டீக்கள் உணவை சிறப்பாக ஜீரணிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த வழியில் அதிக கலோரிகளை எரிக்கலாம்.
நல்ல தூக்கம் பெறுவது
எடையிழப்புக்கு, உடலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியமாகும். எனவே, நாள்தோறும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது உடல் மீட்சியடைய உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Roti For Weight Loss: சோளம் vs ராகி vs ஓட்ஸ் ரொட்டி - எது உடல் எடையை வேகமாக குறைக்கும்? நிபுணர்கள் பரிந்துரைப்பது எதை?
Image Source: Freepik