பிரபல நடிகையான குஷ்பு சுந்தரின் வெயிட் லாஸ் பற்றி தான் இன்று சோசியல் மீடியா முழுவதும் பேச்சாக உள்ளது. சினிமா, அரசியல் என இரட்டை குதிரையில் பயணித்து வரும் குஷ்பு தனது உடல் எடையைக் குறைந்து 54 வயதிலும் 16 வயது போல மாறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குஷ்புவின் இந்த மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்கள் அவருடைய உறுதிப்பாடு, ஒழுக்கம் மற்றும் செல்ஃப் கேர். 54 வயதில் குஷ்பு தனது எடையைக் குறைத்தால், அதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார்.
கோவிட் காலத்தில் தொடங்கிய பயணம்:
நடிகை குஷ்பு என்றாலே அவரது கொழுக்கொழு தோற்றம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும், அப்படி சப்பியாக இருக்கும் குஷ்பு இப்போது அடையாளமே தெரியாமல் ஸ்லிம் ஆகி அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை தான் குஷ்பு. நதியா, ராதா, ரேவதி ரேகா என ஸ்லிம்மான நடிகைகள் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் குண்டான பெண்களும் அழகுதான் என அனைவரின் எண்ணத்தையும் மாற்றியவர் குஷ்பு. அப்படிப்பட்டவர் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அவருக்கு முழங்காலில் பலமுறை அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் மருத்துவர்கள் அவரை உடல் எடையை குறைக்க சொல்லி அறிவுரை சொல்லி இருக்கிறார்கள்.
அதனால் ஒரு வருடத்துக்குள் அவர் 20 கிலோ குறைத்துள்ளார். அதன்பின் தொடர்ந்து தனது நியூ லூப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரையும் மெர்சலாக்கி வந்தார். பலரும் அவரிடம் ஊசி மூலம் உடல் எடையை குறைத்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதாவது உடல் எடை குறைப்பு ஊசிகள் எடுத்தீர்களா? என கேட்டனர். அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள குஷ்பு, தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும் மாலை 45 முதல் 50 நிமிடங்கள் நடைப்பயிற்சியும் செய்வதாகவும், மாலை நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் ஒரு மணி நேர உடற்பயிற்சியை கூடுதலாக செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு ஒழுக்கமான உணவு பழக்கம், நிலையான உடற்பயிற்சி முக்கியம் எனக்கூறியுள்ளார். எதை செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் தனக்கு 20 கிலோ எடையை குறைக்க ஒரு ஆண்டு ஆனது என்றும் அவர் கூறியுள்ளார்.
தடைகளை கடந்த குஷ்பு:
வயது என்பது ஒரு பிரச்சனையல்ல குஷ்புவுக்கு இப்போது 54 வயதாகிறது. ஆனால் குஷ்புவில் நாம் கண்ட மாற்றம், வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. நீங்கள் 25 வயதாக இருந்தாலும் சரி, 55 வயதாக இருந்தாலும் சரி, நீங்கள் விரும்பினால் எந்த வயதிலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
குஷ்பு செய்த இந்த மாற்றம் சினிமா மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, எந்தத் துறையிலும் உள்ள பெண்களுக்கும் ஒரு உத்வேகமாகும். குஷ்பு இப்போது 93 கிலோவிலிருந்து மேலும் 20 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.