What Fiber Foods Help You Lose Weight: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக அமைவது நார்ச்சத்துக்கள் ஆகும். அதே சமயம் பரிந்துரைக்கப்பட்ட நார்ச்சத்துள்ள உணவுகளை தினசரி அளவு சாப்பிடுவது சவாலான ஒன்றாகும். உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க நார்ச்சத்துக்கள் அவசியமாகும். அதன் படி, தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஆதரிக்கிறது.
எனினும், நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சமைப்பதற்கு கடினமாக இருக்கலாம். இந்த நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். அதில் ஒன்றாக அமைவது உடல் எடையிழப்பு ஆகும். எடை நிர்வாகத்தில் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக அமைவது நார்ச்சத்துக்கள் ஆகும். ஏனெனில், இந்த உணவுகள் உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதுடன், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதன் மைக்ரோ நியூட்ரியண்ட் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fiber for Weight Loss: ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ் பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்கவும் உதவுமா?
உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து உணவுகள்
சியா விதைகள்
உடல் எடையைக் குறைக்க உதவும் விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்த சியா விதைகளும் அடங்கும். இதன் நார்ச்சத்துக்கள் அதிலும் குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறிய ஊட்டச்சத்து சக்தியாகும். இந்த சியா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது, ஒரு ஜெல் போன்ற பொருள் உருவாகிறது. இவை நீண்ட நேரம் உடலை முழுமையாக வைக்கவும், செரிமானத்தை மெதுவாக்கவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வெகுவாகக் குறைக்கலாம்.
கருப்பு பீன்ஸ்
இது உயர் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பீன்ஸ் வகையாகும். இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்து காணப்படுகிறது. றைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகள் மெதுவாக சர்க்கரை வடிவில் ஆற்றலை வெளியிடுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கிறது. இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடை மேலாண்மையில் பெரிதும் உதவுகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் சி, கே, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, ப்ரோக்கோலியில் சல்போராபேன் என்ற கலவை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை குடலில் உள்ள நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரித்து, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவ்வாறு உடல் எடையிழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே
வெண்ணெய் பழம்
இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே நிறைந்து காணப்படுகிறது. இவை ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு மிகவும் அவசியமாகும். இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதன் கரையாத நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது தவிர, வெண்ணெய் பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்களும், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பெர்ரி பழங்கள்
ராஸ்பெர்ரி, அவுரி நெல்லிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் போன்ற பெர்ரி பழ வகைகள் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதுடன், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவுக்கு உணவளிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, பெர்ரி பழங்களில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்து காணப்படுகிறது. இதன் பண்புகள் அனைத்தும் உடல் எடைக் கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த வகை நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Fiber Foods: அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான நார்ச்சத்து உணவுகள்
Image Source: Freepik