எடை மடமடனு வேகமாக குறைய இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் போதும்

How protein and fibre help with weight loss: புரோட்டீன், நார்ச்சத்துக்கள் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இவை உடல் எடை குறையவும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் உடல் எடையைக் குறைக்க புரோட்டீன், நார்ச்சத்துக்கள் தரும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
எடை மடமடனு வேகமாக குறைய இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் போதும்


How to add more protein and fibre to your diet: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இரண்டுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான காரணியாக அமைகிறது. எனவே பலரும் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். எனினும் உடல் எடையைக் குறைப்பதில் உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்ப்பது உடல் எடை இழப்பை திறம்பட ஆதரிக்கிறது. உடல் எடையிழப்புக்கு உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் சேர்ப்பது அத்தியாவசியமாகும்.

இவை ஒவ்வொன்றுமே பசியை நிர்வகிப்பதிலும், முழுமையின் உணர்வை ஊக்குவிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது குறித்து வெளியான ஆய்வு ஒன்றில், போதுமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கலோரி இலக்கை அடைவது எடை இழப்புக்கான மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உடல் எடையைக் குறைப்பதற்கு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் எவ்வாறு உதவுகிறது என்பதை விரிவாகக் காணலாம்.

உடல் எடை இழப்புக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து எவ்வாறு உதவுகிறது?

தசை உருவாக்கத்திற்கு புரதம்

போதுமான புரதத்தை உட்கொள்வதன் மூலம் கலோரி பற்றாக்குறையின் போது தசையை பராமரிக்கலாம். இது எடையிழப்புக்கு முதன்மையான தசையை விட கொழுப்பை குறிவைப்பதை உறுதி செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Green vegetables for weight loss: டபுள் மடங்கு வேகத்தில் எடையை வேகமாகக் குறைக்க இத உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க

புரதம் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், புரதத்தை செரிமானம் அடைய உடல் அதிக சக்தியைப் பயன்படுத்துகிறது. இவை கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

முழுமை உணர்வு

புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரண்டுமே பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகள் திருப்தி உணர்வை ஊக்குவிக்கும் ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இவை அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. அதே போல, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், செரிமானத்தை மெதுவாக்குகிறது. இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர உதவுகின்றன.

நார்ச்சத்து உணவுகளுடன் குறைந்த கலோரி உணவு உட்கொள்வது

காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற பெரும்பாலான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது குறைந்த கலோரி தேர்வாக அமையும். இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் கடைப்பிடிக்க அனுமதிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை பல வழிகளில் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு பயணத்தை எளிதாக்க,.. இந்த நுட்பங்களைப் பின்பற்றுங்கள்..

உணவில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்தை சேர்க்கக்கூடிய வழிகள்

  • நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க சுத்திகரிக்கப்பட்டதை விட முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மீன், முட்டை, மெலிந்த இறைச்சிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்ற மூலங்களைச் சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு உணவிலும் புரதத்தைச் சேர்ப்பதை உறுதி செய்யலாம்.
  • தாகம் எடுக்கும் போது பசி எனத் தவறாக புரிந்து சிற்றுண்டி உட்கொள்வர். எனவே நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது பசியைக் கட்டுப்படுத்தவும் செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

பயனுள்ள எடை இழப்புக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், சிறந்த முடிவுகளுக்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் எளிய முறையில் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: வெய்ட்டு குறைய சாப்பாட்ட மட்டும் குறைச்சா போதாது.. இந்த விஷயத்தையும் மாத்தனும்..

Image Source: Freepik

Read Next

After Dinner Habits: உடல் எடை சரசரவென குறைய இரவு உணவுக்கு பின் இந்த 5 விஷயம் செய்தாலே போதும்!

Disclaimer