What happens if you are fiber deficient: அன்றாட உணவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள், பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்துக்கள் மிகுந்த பங்களிக்கின்றன. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களுக்காக நம் அன்றாட உணவில் நார்ச்சத்துக்கள் முக்கியமானதாக விளங்குகிறது. குறிப்பாக, நார்ச்சத்துக்கள் மாக தாவர உணவுகளில் காணப்படுகிறது.
மேலும், போதுமான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மலச்சிக்கலைத் தடுக்கலாம். மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த மற்றும் இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உள்ளிட்ட ஏராளமான நன்மைகளுக்கு நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. இவை அதிக நிறைவைத் தந்து, நீண்ட நேரம் நிரம்பியதாக உணர உதவுகிறது. இதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், இது போன்ற பல்வேறு நன்மைகள் இருந்த போதிலும், பலர் தங்களது தினசரி நார்ச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில்லை. இது நாளடைவில் சில அசௌகரியமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இதில், நார்ச்சத்து குறைபாட்டால் உடலில் தோன்றும் அறிகுறிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fiber Rich Foods: இந்த உணவுகள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.!
நார்ச்சத்து குறைபாட்டால் உடலில் தோன்றும் அறிகுறிகள்
செரிமான பிரச்சனைகள்
நார்ச்சத்து குறைபாட்டிற்கான மிக முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது அடங்கும். இதனால், நார்ச்சத்து குறைபாடு காரணமாக எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) அல்லது மூல நோய் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுவது மிகவும் பொதுவானதாகிவிடும். சீரான உட்கொள்ளலில் உதவியுடன் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்.
சீரற்ற இரத்த சர்க்கரை
சிலருக்கு உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்வதைப் பார்த்திருப்போம். இதற்கு நார்ச்சத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், கரையக்கூடிய நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தலாம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். எனவே நார்ச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.
மலச்சிக்கல்
குறைந்த நார்ச்சத்து உட்கொள்ளலின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது அடங்கும். பொதுவாக, நார்ச்சத்துக்கள் மலத்தில் பருமனைச் சேர்ப்பதன் மூலம் குடல் இயக்கங்களை சீராக்க உதவுகிறது. இந்நிலையில், போதுமான நார்ச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்க்காததால், அடிக்கடி மலம் கழிக்கவோ அல்லது கடினமான, உலர்ந்த மலத்தை வெளியேற்றவோ வழிவகுக்கிறது.
எப்போதும் பசியுணர்வு
தொடர்ந்து அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவது உணவில் போதுமான நார்ச்சத்துக்கள் இல்லை என்பதைக் குறிக்கலாம். உணவில் நார்ச்சத்துக்களை சேர்ப்பது வயிறு நிரம்பிய முழுமை உணர்வை அளிக்கிறது. அதே சமயம், குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் விரைவாக செரிமானம் அடைகிறது. இதனால், விரைவில் பசி உணர்வைத் தூண்டலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!
வாயு மற்றும் வீக்கம்
போதுமான நார்ச்சத்து உட்கொள்ளலின் மூலம் வீக்கம் மற்றும் அதிகப்படியான வாயு போன்ற செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறலாம் ஆனால், அதிகப்படியான நார்ச்சத்துக்களை உட்கொள்வதும் இது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே அன்றாட உணவில் போதுமான நார்ச்சத்து உட்கொள்ளலை வழக்கத்தில் கொள்ள வேண்டும்.
சோர்வடைதல்
குறைந்த நார்ச்சத்து உட்கொள்ளலின் காரணமாக ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மோசமாக்கலாம். இது உடலை சோம்பலாக மற்றும் சோர்வாக உணர வைக்கலாம். போதுமான நார்ச்சத்து உட்கொள்ளலின் உதவியுடன், உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம்.
மோசமான கொழுப்பின் அளவுகள்
போதுமான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலில் ஆரோக்கியமான கொழுப்பின் அளவைப் பராமரிக்க உதவுகிறது என ஆய்வுகளில் கூறப்படுகிறது. ஆனால், குறைந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிக கொழுப்பின் அளவிற்கு, குறிப்பாக, கெட்ட கொழுப்பு அல்லது எல்டிஎல் கொழுப்பிற்கு பங்களிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Fiber rich fruits: நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik