How vitamin B12 deficiency worsens health: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி12 முக்கியமானதாகும். ஆனால் இதன் குறைபாடு அதாவது உடலுக்கு போதுமான வைட்டமின் பி12 கிடைக்காதபோது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். வைட்டமின் பி12 ஆனது நரம்பு செயல்பாடு, இரத்த சிவப்பணு உருவாக்கம் மற்றும் டிஎன்ஏ தொகுப்பு போன்றவற்றிற்கு தேவையான அவசியமான ஊட்டச்சத்து ஆகும்.
அதே சமயம், மற்ற சில வைட்டமின்களைப் போல, வைட்டமின் பி12 ஊட்டச்சத்து ஆனது உடல் தானாகவே உற்பத்தி செய்ய முடியாத வைட்டமின் ஆகும். உடலின் பல செயல்பாடுகளை ஆதரிக்கும் இந்த வைட்டமின் பி12 ஆனது இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் போன்ற விலங்கு பொருட்கள் மூலம் பெறப்படுகிறது. இந்நிலையில், வைட்டமின் பி12 குறைபாடு காணமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரத்த அணுக்கள் பாதிப்பு, நரம்பு மண்டல பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். இதில் வைட்டமின் பி12 குறைபாடு உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Deficiency: உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் என்னவாகும் தெரியுமா?
வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்
நினைவாற்றல் இழப்பு
வைட்டம்பி 12 குறைபாடு காரணமாக மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் இழப்பு, மற்றும் டிமென்ஷியா அபாயம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். அறிவாற்றல் செயல்பாட்டிற்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் முக்கியம் என்பதால் இதன் குறைபாடு அறிவாற்றல் செயல்முறைகளை மெதுவாக்குகிறது. இது கற்றல், முடிவெடுக்கும் திறனைக் கடினமாக்கலாம்.
நரம்பு பாதிப்பு
நரம்புகளைப் பாதுகாக்கக் கூடிய உறையைப் பராமரிப்பதில், இந்த வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் குறைபாடு நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கக் கூடும். இதனால் கைகள், கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை போன்றவை ஏற்படலாம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நிரந்தர நரம்பு சேதம் ஏற்பட்டு இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படலாம்.
மனச்சோர்வு
மனநிலையை ஒழுங்குபடுத்தும் ஒரு நரம்பியக்கடத்தியான செரோடோனின் உற்பத்திக்கு வைட்டமின் பி12 அவசியமானதாகும். ஆனால், இதன் குறைபாடு செரடோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. இதனால் மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் இதன் குறைபாடு காரணமாக மனச்சோர்வு கடுமையானதாக மாறக்கூடும். எனவே இதற்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது.
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபட வைட்டமின் பி12 முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை உடல் எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Foods: அட நீங்க நீங்க முட்டையும் இறைச்சியும் சாப்பிடமாட்டீங்களா? வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள்!
இதய ஆரோக்கிய பாதிப்பு
இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டீன் அளவைக் கட்டுப்படுத்த வைட்டமின் B12 உதவுகிறது. இது இதய நோயுடன் தொடர்புடைய ஒரு அமினோ அமிலமாகும். இந்நிலையில், வைட்டமின் பி12 குறைபாடு ஹோமோசிஸ்டீன் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
பார்வை சார்ந்த பிரச்சினைகள்
கடுமையான வைட்டமின் பி12 குறைபாடானது பார்வை நரம்புகளை சேதப்படுத்தும் அபாயம் ஏற்படலாம். இதன் தீவிர நிகழ்வுகளில் பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில், பார்வை நரம்பியல் என்று அழைக்கப்படும் இந்த நிலையானது உடனடி B12 சப்ளிமெண்டேஷன் மூலம் மாற்றியமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இரத்த சோகை
உடலில் இரத்த சிவப்பணு உற்பத்தியில் வைட்டமின் பி12 மிக முக்கியமானதாகும். வைட்டமின் பி12 குறைபாடு மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவுக்கு வழிவகுக்கிறது. இங்கு இரத்த சிவப்பணுக்கள் பெரிதாகி ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் குறைவான செயல்திறன் கொண்டவையாக மாறுகிறது. இதனால் உடல் சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படலாம். இதன் காரணமாக அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம்.
மோசமான செரிமானம்
வைட்டமின் பி12 உதவியுடன் ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கலாம். இதன் குறைபாடு ஆனது வயிற்றுப்போக்கு, வீக்கம், மலச்சிக்கல் அல்லது பசியின்மை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. நாளடைவில், இது செரிமானத்தை பாதிப்பதாகவும், குடல் புறணி பலவீனமடைவதற்கும் பங்களிக்கலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் இது போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இதற்கு உணவுமுறை, செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் வைட்டமின் பி12 எடுத்துக் கொள்ளலாம். எனினும், பரிசோதனை மற்றும் சப்ளிமெண்ட்ஸ்க்காக ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது அவசியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: வைட்டமின் பி12 குறைபாட்டை அதிகரிப்பதில் சிரமமா? இந்த மூலிகை, மசாலா பொருள்களைச் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik