Vitamin b12 increasing herbs and spices: உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது உடலுக்கு வலிமை மற்றும் ஆற்றலை வழங்கக் கூடியதாகும். இது போன்ற ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், இது உடலில் அதிகளவு இருப்பதும், குறைந்தளவு இருப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் உடலுக்குத் தேவையான போதுமான அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
அவ்வாறு சில குறிப்பிட்ட வைட்டமின்களின் குறைபாடு உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான வைட்டமின்களில் வைட்டமின் பி12 மிகுந்த பயனளிக்கும். இதன் குறைபாடு காரணமாக நரம்புகள், தசைகள், மூளை, இதயம் மற்றும் எலும்புகள் பலவீனப்படுத்தப்படுகிறது. பொதுவாக வைட்டமின் பி12 மிகக் குறைவான பொருள்களிலியே இருப்பதால், இது மிகப்பெரிய கவலையாகும். மேலும், பல நேரங்களில் இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகும் இதன் குறைபாடு நீங்குவதில்லை. இதில் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Foods: வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகள் இங்கே..
வைட்டமின் பி12 உணவுகள் ஏன் தேவைப்படுகிறது?
பொதுவாக, உடலால் வைட்டமின் பி12 ஐப் பயன்படுத்த முடியாது. அதே சமயம் சில சமயங்களில் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களுமே வீணாக வெளியேறுகிறது. இந்த சூழ்நிலையில், உடலில் இதன் குறைபாடு இருந்தால் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முட்டை, மீன், பால் பொருட்கள் போன்றவை உதவும். இது தவிர, அன்றாட உணவில் சேர்க்கப்படும் சில மசாலாப் பொருள்களும் வைட்டமின் பி12 நிறைந்தவையாகும். தேவைப்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.
முக்கிய கட்டுரைகள்
வைட்டமின் பி12 அதிகரிக்க மசாலா பொருள்களின் பங்கு
பொதுவாக, அனைத்து ஊட்டச்சத்துக்களும் குடலுக்குள் இருக்கும் உணவில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது குடல் பாக்டீரியாக்களால் செய்யப்படக்கூடிய வேலையாகும். குடலுக்குள் நல்ல பாக்டீரியாக்கள் பில்லியன் கணக்கு அளவில் உள்ளது. ஆராய்ச்சியின் படி, குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வைட்டமின் உறிஞ்சுதல் மற்றும் பயன்பாடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்தலாம்.
வைட்டமின் பி12 அதிகரிக்க உதவும் மசாலா பொருள்கள்
இலவங்கப்பட்டை
ஆய்வு ஒன்றில், பாலிபினால்களை போதுமான அளவு உட்கொள்வது குடல் பாக்டீரியாக்களின் சரியான எண்ணிக்கையை பராமரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியில் இந்த இலவங்கப்பட்டையில் அதிகளவிலான பாலிபினால்கள் உள்ளது. இந்த மசாலா எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கிராம்பு
இது ஒரு சக்திவாய்ந்த மசாலாப் பொருளாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டையைப் போல, கிராம்பிலும் அதிகளவிலான பாலிபினால்கள் நிறைந்துள்ளது. வீக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Foods: இந்த சைவ உணவுகள் வைட்டமின் பி12-ன் சிறந்த மூலமாகும்.!
புதினா
இது வயிறு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இது வயிற்று வலி, வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயுத் தொல்லைக்கு சிறந்த தேர்வாகும். இதற்கு உலர்ந்த புதினாவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மோருடன் சேர்த்து குடிக்கலாம். இது ஒரு புரோபயாடிக் உணவாக இருப்பதால், இதை மோருடன் சேர்த்து குடிப்பது அதிக பலனைத் தருகிறது.
நட்சத்திர சோம்பு
நட்சத்திர சோம்புவை குறைவாக எடுத்துக் கொண்டிருப்பினும், இது பல்வேறு ஆரோக்கியமான மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும். இதை எடுத்துக் கொள்வது வைட்டமின் பி12 குறைபாட்டை சமாளிப்பதற்கு, குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு மிளகு
இது பல்வேறு வழிகளில் ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது. கருப்பு மிளகும் பாலிபினால்களை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மற்ற கார உணவுகளுடன் ஒப்பிடுகையில், கருப்பு மிளகு நுகர்வு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் மற்ற தளங்களில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டதாகும். உண்மையான தகவல்களைப் பெற மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Foods: அட நீங்க நீங்க முட்டையும் இறைச்சியும் சாப்பிடமாட்டீங்களா? வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள்!
Image Source: Freepik