Does vitamin d deficiency cause low back pain: இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் நீண்டநேர உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதே சமயம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஏனெனில் மக்கள் பெரும்பாலும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் எப்போதும் ஏசியில் அமர்வது உள்ளிட்டவற்றால் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, முதுகுவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். மருத்துவரின் கூற்றுப்படி, இவ்வாறு கீழ் முதுகு வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வைட்டமின் டி குறைபாடு அமைகிறது. இது குறித்து மெடிகவர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சச்சின் நல்வடே அவர்கள், வைட்டமின் டிக்கும் முதுகுவலிக்குமான தொடர்பு குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விவரித்துள்ளார். அது பற்றி இதில் விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Deficiency: சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யும் சூப்பர் வழிகள் இதோ!
வைட்டமின் டி ஏன் அவசியம்?
பொதுவாக வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் என்பது எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு அமைப்பு கட்டுப்பாடு மற்றும் தசை செயல்பாடு போன்றவற்றிற்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். பெரும்பாலும், இந்த ஊட்டச்சத்துக்களை சூரிய ஒளியில் இருந்து அல்லது கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் பெறலாம். இது தவிர, உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், மருத்துவரின் பரிந்துரையில் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இது தவிர, வைட்டமின் டி ஆனது மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே குறைந்த அளவிலான வைட்டமின் டி மனச்சோர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கலாம். சில ஆய்வுகளில் போதுமான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
signs-and-symptoms-of-vitamin-d-deficiency-in-winter-Main-1736745186928.jpg
வைட்டமின் டி குறைபாடு மற்றும் கீழ் முதுகு வலிக்கும் இடையேயான தொடர்பு
NCBV படி வைட்டமின் டி குறைபாடு ஆனது கீழ் முதுகு வலியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மேலும், முதுகெலும்பின் தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு திசுக்களில் வைட்டமின் டி ஏற்பிகள் காணப்படுகிறது. இவை முதுகெலும்பு தசைகள் மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமலேசியா போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் முதுகெலும்பு வலி மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே முதுகு வலி உள்ள நபர்களில் வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது அவசியமாகும். மேலும், நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான கீழ் முதுகு வலி உள்ள நபர்கள் மருத்துவர்களின் உதவியுடன் வைட்டமின் டி அளவை பரிசோதிக்கலாம். குறிப்பாக, வயதானவர்கள் அல்லது சூரிய ஒளியில் குறைவாக வெளிப்படுபவர்கள் இந்த வைட்டமின் டி குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ளனர். இந்நிலையில், நோயாளிகள் தங்கள் உணவில் மருத்துவரின் பரிந்துரையில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். இது தவிர, சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin D குறைபாட்டை வேகமாக குணமாக்க இந்த பானங்களை குடிக்கவும்..
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?
வைட்டமின் டி உணவுகள்
அன்றாட உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் படி, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Are-Blue-Eyes-More-Sensitive-to-the-Sun_-Hero-1024x672-1744195936831.jpg
சூரிய ஒளியின் மூலம்
வைட்டமின் டி குறைபாட்டை சமாளிக்க ஒரு எளிய வழியாக சிறிது நேரம்சூரிய ஒளியில் உட்காருவது அடங்கும். ஏனெனில் இது வைட்டமின் டி-ன் ஒரு முக்கிய மூலமாகும். இதற்கு காலை மற்றும் மாலை சூரிய ஒளியில் உட்காரலாம். அதே சமயம், கைகள் மற்றும் கால்களில் சன்ஸ்கிரீன் தடவி உட்காருவதை மறக்காதீர்கள். இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்.
வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ்
வைட்டமின் டி குறைபாட்டின் கடுமையான சந்தர்ப்பங்களில், மருத்துவர் நோயாளிக்கு சப்ளிமெண்ட்ஸ்களைப் பரிந்துரைப்பர். இந்த சப்ளிமெண்ட்ஸ் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 போன்ற வடிவங்களில் கொடுக்கப்படலாம். மேலும் இது நபரின் தேவைக்கேற்ப அதிகரித்து அல்லது குறைத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக ஒருவர் முதுகுவலி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். இது தவிர, மோசமான தோரணை காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். எனவே முதுகுவலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: 50-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கணும்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version