Vitamin D Deficiency: சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யும் சூப்பர் வழிகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
Vitamin D Deficiency: சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யும் சூப்பர் வழிகள் இதோ!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் குறைந்தது 13% பேர் இந்த வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை நாம் எளிதாக இயற்கை முறையிலும் பெற முடியும். அந்த வகையில் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை சூரிய ஒளியின் மூலம் பெறலாம். வைட்டமின் டி ஆனது எலும்புகளின் வளர்ச்சிக்கும், கனிமமயமாக்கலை ஊக்குவிக்கும் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் என்று கூறப்படுகிறது. இது பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Diet: டையட்டில் சேர்க்க வேண்டிய வைட்டமின் D உணவுகள் இது தான்?

வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்

வைட்டமின் டி குறைபாடு காரணமாக பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகலாம். இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படலாம். வைட்டமின் டி குறைபாட்டால் தசைகளில் பலவீனம், எலும்புகளில் வலி, மூட்டுகளின் சிதைவுகள் மற்றும் நாள்பட்ட சோர்வு போன்றவை ஏற்படலாம்.

வைட்டமின் டி-ஐ எவ்வாறு பெறலாம்?

சூரிய ஒளியில் ஊறவைப்பதைத் தவிர, வைட்டமின் டி அளவை அதிகரிக்க சில பயனுள்ள வழிகள் உதவுகின்றன.

காளான்கள்

வைட்டமின் D நிறைந்த ஆதாரமாக காளான்கள் அமைகிறது. ஏனெனில், சூரிய ஒளியில் வெளிப்படும் போது காளான்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை உருவாக்குகின்றன. இதன் வழக்கமான நுகர்வு வைட்டமின் D2 மற்றும் D3-ஐ மிகவும் அதிகரிக்க உதவுகிறது.

முட்டை மஞ்சள் கரு

முட்டைகள் உட்கொள்வது புரதத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். மஞ்சள் கருவில் வைட்டமின் டி ஊட்டச்சத்து உள்ளடக்கம் அதிகம் உள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்து மதிப்புக்காக முட்டையின் மஞ்சள் கருவை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Supplements: அனைவரும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாமா? இதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

கொழுப்பு மீன்கள்

சால்மன், கானாங்கெளுத்தி, சூரை போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் வைட்டமின் D நிறைந்த ஆதாரங்களாகும். இவை இயற்கை உணவு ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட உணவுகள்

பால், ஆரஞ்சு பழச்சாறு, ஓட்ஸ் போன்ற தானியங்கள், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், தயிர் அல்லது டாஹி மற்றும் டோஃபு போன்ற சோயா பொருட்கள் போன்றவை செறிவூட்டப்பட்ட உணவுகளாகும். இவை அதிகளவு வைட்டமின் டி உள்ள உணவுகளின் குழுவாகும்.

சியா விதைகள்

இது சிறிய அளவு வைட்டமின் டி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களுடன் காணப்படுகிறது. இது வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைத் தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

சூரிய ஒளியைத் தவிர, வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது போன்ற உணவுகளின் அடிப்படையில் வைட்டமின் டி சக்தியை அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Foods: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

Image Source: Freepik

Read Next

உஷார்! இந்த பழக்கங்களால் உங்க கண் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்!

Disclaimer