Sat Sep 12, 2026 | 12:57 AM IST

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெற எந்த நேரம் சிறந்தது தெரியுமா?

Best Time To Get Sunlight For Vitamin D: சூரிய ஒளி வைட்டமின் என்றாலே நம் நினைவுக்கு வருவது வைட்டமின் டி ஆகும். இந்த ஊட்டச்சத்தை உணவின் மூலமும் பெறலாம். எனினும், போதுமான வைட்டமின் டி இல்லாமல் எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றைப் பாதிக்கிறது. எனவே இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெறுவதன் மூலம் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு, வலுவான எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்கிறது. சூரிய ஒளி, குறிப்பாக புற ஊதா B (UVB) கதிர்களை வெளிப்படும் போது நம் உடல்கள் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்தை உற்பத்தி செய்கிறது.

இத்தகைய பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தரக்கூடிய சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி தொகுப்பை எவ்வாறு அதிகரிப்பது? இதற்கு நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து அதிகம் உற்பத்தியாகும் வைட்டமின் டி-யை எடுத்துக் கொண்டு, பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதன் படி, வைட்டமின் டி அளவை அதிகரிக்க சூரிய ஒளியின் சக்தியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் இந்த ஊட்டச்சத்து ஏன் மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Supplements: அனைவரும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாமா? இதன் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

வைட்டமின் டி நன்மைகள்

வைட்டமின் டி நமது ஆரோக்கியத்தில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். மேலும் இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை சீராக்க உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு பெரியவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோயும், குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் போன்ற நிலைமைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. போதுமான அளவு வைட்டமின் டி-ன் உதவியுடன் இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள், மற்றும் தன்னுடல் தாக்க நிலைகள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

வைட்டமின் டி பெற சூரிய ஒளியை வெளிப்படுத்த சிறந்த நேரம்

சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெற விரும்புபவர்கள், அதற்கானே நேரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, வைட்டமின் டி உற்பத்திக்கு காரணமான UVB கதிர்கள், சூரியன் உச்சத்தில் இருக்கும் போது மிகவும் தீவிரமானவையாக இருக்கும். பொதுவாக, இது பகலில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நிகழக்கூடியதாகும். இந்த குறிப்பிடப்பட்ட நேரங்களில் சூரியக் கதிர்கள் நேரடியாகவும், சருமத்தில் ஊடுருவி வைட்டமின் D ஐ உற்பத்தி செய்வதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இந்த மிகவும் தீவிரமான நேரத்தில் நாம் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெறலாம். எனினும், சரும பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே சருமத்தின் வகையைப் பொறுத்து 10-30 நிமிடங்களுக்கு நேரடியாக வெளிப்படுவதை வரம்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக நேரம் சூரிய ஒளி வெளிப்பாடு சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க நீண்ட காலத்திற்கு சன்ஸ்கிரீன் அல்லது பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த சூரிய ஒளி வெளிப்பாட்டுடன், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை இணைத்துக் கொள்வது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு உகந்ததாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Diet: டையட்டில் சேர்க்க வேண்டிய வைட்டமின் D உணவுகள் இது தான்?

அதிக வைட்டமின் டி-யை எவ்வாறு பெறலாம்?

சூரிய ஒளியில் இருந்து போதுமான வைட்டமின் டி பெறுவது, வெளியில் இருப்பதை விட அதிகம் தேவைப்படுகிறது. எனவே, வைட்டமின் D தொகுப்பை அதிகரிக்க சில குறிப்புகள் உள்ளது.

பொதுவாக, சூரிய ஒளியில் UVB கதிர்கள் சருமத்தில் ஊடுருவும்போது வைட்டமின் D தொகுப்பு ஏற்படுகிறது. இதில் ஒருவர் எவ்வளவு நேரம் சருமத்தை சூரிய ஒளியில் வெளிப்படுத்துகிறோமோ அவ்வளவு வைட்டமின் டி உற்பத்தி செய்யலாம். இதில் உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகம் போன்றவற்றை சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். எனினும், இதன் சமநிலை முக்கியமானதாகும். இதன் நீடித்த வெளிப்பாடு, சரும சேதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

மேலும் இதன் தீவிரமான வெளிப்பாட்டால் தோல் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க சன்ஸ்கிரீன் அவசியம் என்றாலும், இது UVB கதிர்களைத் தடுத்து வைட்டமின் டி உற்பத்தியைக் குறைக்கும். எனவே சூரிய ஒளியில் குறுகிய காலத்திற்கு அதாவது சரும வகையைப் பொறுத்து 10 முதல் 30 நிமிடங்கள், சன்ஸ்கிரீனைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். நீண்ட வெளிப்பாடுகளுக்கு, சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சருமத்தின் வகையைப் பொறுத்து வைட்டமின் டி உற்பத்தி

சருமத்தின் வகையானது, எவ்வளவு விரைவாக வைட்டமின் D ஐ உற்பத்தி செய்கிறது என்பதைப் பொறுத்து அமையும். இதில் கருமையான சருமம் உள்ளவர்களை விட இலகுவான சருமம் கொண்டவர்கள் வைட்டமின் D ஐ விரைவாக பெறுவர். அதன் படி, கருமையான சருமம் கொண்டிருப்பவர்கள், இலகுவானவர்களுக்குக் கிடைக்கும் அதே அளவு வைட்டமின் டி உற்பத்தி செய்ய அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.

மேலும், நீண்ட குளிர்காலம் உள்ள பகுதியில் இருப்பது அல்லது சூரிய ஒளி குறைவாக இருக்கும் பகுதியில் இருப்பது போதுமான அளவிலான வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ பராமரிக்க ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. எனவே தேவைகளின் அடிப்படையில் வைட்டமின் டி பெறுவதற்கான சரியான அளவைத் தீர்மானிக்க சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.

இவ்வாறு பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் சூரிய ஒளி வெளிப்பாட்டில் இருப்பது வைட்டமின் டி உற்பத்தி செய்ய ஏதுவாக அமைகிறது. மேலும், இதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Foods: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள்

Image Source: Freepik

Read Next

ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content