Expert

ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

இதனால், பலரும் ஜப்பானியர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். ஜப்பானிய மக்களின் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் நிக்கி சாகர் அவர்கள்  ஜப்பானியர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான சில குறிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் விரிவாகக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Night Shift Healthy Tips: நைட் ஷிப்ட்லயும் ஹெல்த்தியா, சுறுசுறுப்பா வேலை செய்யணுமா ? இத செய்யுங்க

ஜப்பானியர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ரகசியம்

80% வயிறு நிரம்புவது (Hara Hachi Bu)

ஹரா ஹச்சி பு (Hara Hachi Bu) என்பதற்கான பொருள் வயிறு முழுவதும் நிரம்புமாறு சாப்பிடக் கூடாது. உண்மையில் வயிறு 80 சதவீதம் நிரம்பியிருந்தால், சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், வயிறு முழுமையாக உணவு உண்ணுவது அல்லது அதிகம் சாப்பிடுவது உடல் மற்றும் மனம் இரண்டையும் மந்தமாக உணரவைக்கிறது. இவ்வாறு 80% வயிறு நிரம்பியவாறு மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல் எடை கூடுவதும் தடுக்கப்படுகிறது.

வாபி-சபி (Wabi-sabi)

வாபி-சபி (Wabi-sabi) என்பது ஜப்பானிய அணுகுமுறையாகும். அதாவது முழுமைக்குப் (Perfection) பதிலாக நிறைவின்மையில் (Imperfection) அழகைக் கண்டறிவதைக் குறிக்கிறது. இதில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் எல்லாம் சரியாக இல்லை. வாபி-சபியைப் பின்பற்றும் போது, நாம் நிறைவின்மையிலிருந்தும் நிறைவை அடைய முடியும். ஒருவர் நிறைவானதை மட்டுமே விரும்பும் போது, அதை பெறமுடியாமல் போனால், அது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதனால் நம் அன்றாட செயல்களும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கைசென் (Kaizen)

கைசென் என்பது ஒவ்வொரு நாளும் சிறிய மேம்பாடான செயல்களில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் 1% ஆவது சிறப்பாக மாற முயற்சிப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு நாள் தோறும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது வாழ்க்கையை மென்மேலும் உயர்த்துவதற்கான வழியைக் குறிக்கிறது. இன்றைய சூழலில் நாம் பொழுதுபோக்கான செயல்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். இதனால் உடல் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்தத் தவறுகிறோம். ஜப்பானியர்கள் இந்த அணுகுமுறையைக் கையாள்வதன் மூலம் நம் உடல் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Brain Power: மூளை ஃபாஸ்ட்டா வேலை செய்யணுமா? இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க

இகிகை (Ikigai)

Ikigai என்ற ஜப்பானிய அணுகுமுறையானது வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. து மக்களுக்கு உண்மையிலேயே முக்கியமானது என்ன என்பதைக் கண்டறியவும், நோக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கவும் உதவும் கருத்தாக அமைகிறது. அதாவது இதில் தினமும் காலை எழும் போது ஒரு நோக்கத்துடன் எழுந்திருப்பீர்கள். இந்த Ikigai-யில் நான்கு விதிகள் உள்ளது. அவை,

  • விரும்பும் வேலையைச் செய்வது
  • எதில் நன்றாக இருக்கிறோமோ, அதில் வேலையைச் செய்வது
  • உங்களுக்கு மற்றும் உலகத்திற்குத் தேவையானதை மட்டும் செய்வது
  • பணம் செலுத்தக் கூடிய வேலையைச் செய்வது

ஷின்ரின்- யோகு (Shinrin-yoku)

ஜப்பானிய மொழியில் ஷின்ரின் என்றால் காடு என்றும், யோகு என்றால் குளியல் என்றும் பொருள். அதாவது இயற்கையோடு அதிக நேரம் செலவிடுதலைக் குறிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதாகும். இந்தப் பயிற்சியானது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பங்களிக்கிறது. இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், தசை பதற்றம் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி போன்ற பல்வேறு உடலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

ஜப்பானியர்களின் இந்த ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Physical Activity Benefits: தினமும் உடல் செயல்பாடுகளை செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Herbs For Brain Power: மூளை ஃபாஸ்ட்டா வேலை செய்யணுமா? இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க

Disclaimer