Physical Activity Benefits: தினமும் உடல் செயல்பாடுகளை செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Physical Activity Benefits: தினமும் உடல் செயல்பாடுகளை செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?


Why Physical Activity Is Important For Health And Wellbeing: உடல் செயல்பாடு என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இன்று பலரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை போன்றவற்றால் பலவகையான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் எந்த உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருப்பதே ஆகும். வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் காரணியாகும்.

உடல் செயல்பாடு ஆனது ஆற்றல் செலவினம் தேவைப்படும் எலும்பு தசைகளால் உற்பத்தி செய்யப்படும் தன்னார்வ உடல் இயக்கமாகக் கூறப்படுகிறது. இது பகல், இரவு என எந்த நேரத்திலும், எந்த தீவிரத்திலும் செய்யக்கூடியதை உள்ளடக்கியதாகும். உடல் செயல்பாடு என்பது உடற்பயிற்சி செய்வதை உணர்த்துகிறது. அது மட்டுமல்ல, உடலுறுப்புகளுக்கு வேலை தரக்கூடிய வீடு மற்றும் அலுவலக வேலைகளைச் செய்வது, சுத்தம் செய்வது, கடைக்குச் செல்வது, சுறுசுறுப்பான பயணம் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். ஆனால், இதற்கான முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் உணராமல் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Night Bath: இரவு நேரத்தில் குளிப்பதில் இவ்வளவு நல்லது இருக்கா?

உடல் செயல்பாடு ஏன் முக்கியம்

உடல் செயல்பாடு செய்வது சுகாதாரம் மற்றும் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கான ஒரு மூலக்கல்லாக அமைகிறது. உடல் செயலற்ற தன்மையில் இருக்கும் போது பக்கவாதம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் தீவிரம் குறைவதற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அதை நம் அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது.

உடல் செயல்பாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க

பொதுவாக உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குவது உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதே ஆகும். உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க சிறந்த தேர்வாக அமைகிறது. உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதே சமயம், அதிக தீவிரமான செயல்பாடுகளைச் செய்வது அதிக கலோரிகளை எரிக்கிறது. ஏனெனில் உடல் செயல்பாடுகளைச் செய்யும் போது, உடலில் உள்ள தசைகள் உள்ளிட்ட உறுப்புகள் இயங்கி வேலையைச் செய்கிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு எடை குறைய காரணமாகிறது.

நோய்களை எதிர்த்துப் போராட

உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது பல்வேறு வகையான நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்த உதவுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கிறது. இதன் மூலம் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் ஆபத்தைக் குறைக்கலாம். அதன் படி வழக்கமான உடல் செயல்பாடு உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மனச்சோர்வு, வகை 2 நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இவை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sesame Oil Massage Benefits: உடம்பு வலி காணாமால் போக நல்லெண்ணெய் மசாஜ் செய்யுங்க

ஆற்றலை அதிகரிக்க

வழக்கமான உடல் செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் தசை வலிமையை மேம்படுத்தவும், சகிப்புத் தன்மையை அதிகரிக்கவும் முடியும். உடல் செயல்பாடுகள் உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அனுப்புகிறது. மேலும் இதன் மூலம் இதய அமைப்பு மிகவும் திறமையாக இயங்குகிறது. அதாவது இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஆற்றலை அன்றாட வேலைகளைச் செய்வதன் மூலம் பெற முடியும்.

பாலியல் வாழ்க்கை மேம்பாட்டிற்கு

இன்று பலரும் உட்கார்ந்த வாழ்க்கை முறையால் மிகவும் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். இந்த அதிகப்படியான மன அழுத்தம் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதற்கு சிறந்த தீர்வு மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். வழக்கமான உடல் செயல்பாடு ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதுடன், உடல் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. இது பாலியல் திறனை அதிகரிக்கலாம்.

உடல் செயல்பாட்டில் ஈடுபடாத ஆண்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து வழக்கமான உடல் செயல்பாடு செய்யும் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு பிரச்சனைகள் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெண்களும் வழக்கமான உடல் செயல்பாடுகளை செய்வது அவர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tulsi Mala Benefits: துளசி மாலை அணிவதில் இவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்கா?

சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்க

பல்வேறு காரணங்களால் இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். உண்மையில் வழக்கமான உடல் செயல்பாடுகள் சிறந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதே சமயம் உறங்கும் நேரம் முன்னதாக உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது. இது உறக்கத்தைத் தருவதற்கு மாறாக உற்சாகத்தை அளிக்கும். அதன் படி யோகா மற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளைச் செய்பவர்கள் பகல் நேரத்திலோ அல்லது தூங்குவதற்கு குறைந்த 4-5 மணி நேரத்திலோ செய்வது நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில் அன்றாட பழக்கத்தில் உடல் செயல்பாடுகளை இணைப்பது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

மனநிலையை மேம்படுத்த

நாம் முன்னரே பார்த்தது போல, பிஸியான காலகட்டத்தில் மன அழுத்தம், கவலை, பதட்டம் போன்றவற்றுடனே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு உடல் செயல்பாடு சிறந்த தேர்வாக அமைகிறது. அதாவது உடல் செயல்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடலில் இரசாயனங்கள் தூண்டப்படுகிறது. இவை மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நிதானமாகவும் வைத்திருக்க உதவும். எனவே தொடர்ந்து உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், தோற்றத்தை மேம்படுத்துகிறது. இது அவர்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

அன்றாட வாழ்வில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இது போன்று பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மன ஆரோக்கியத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது?

Image Source: Freepik

Read Next

காதல் செய்வது எப்படி? இனி நீங்க வேறலெவல்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version