$
How to Love: இப்போதெல்லாம் எல்லோருடைய வாழ்க்கையும் மிகவும் பிஸியாகிவிட்டது, யாருக்கும் தனக்கென்று நேரம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் போதாத என்ற நிலை மக்களிடையே வந்துவிட்டது. முன்னேறி பிடித்த ஒரு இடத்தை தக்கவைத்து அனுபவிப்பதற்கு பதிலாக அடுத்தக் கட்டத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார்கள். இப்படியே ஓடினால் வாழ்க்கையை எப்போது வாழ்வது. "வாழ்க்கை வாழ்வதற்கு தானே"
காதலிப்பது எப்படி என்றவுடன் நீங்கள் ஆர்வத்தோடு இதை ஓபன் செய்திருக்கலாம். முதலில் நீங்கள் யாரை காதலிக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையை இறுதிவரை படித்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு தெளிவு பிறக்கும்.
இன்பம் துன்பம் கலந்ததே வாழ்க்கை
இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. இன்பம் மட்டுமே வந்தால் அது சலித்துவிடும். அப்படி வாழ கடவுளாலும் முடியாது. இதற்கு பல புராணக் கதைகள் உள்ளது. அதேபோல் யார் வாழ்விலும் துன்பம் மட்டுமே நிரந்தரமாக இருக்காது. காரணம் மாற்றம் ஒன்றே மாறாதது. பலர் வாழ்க்கையில் துன்பம் மட்டுமே வருகிறது என சிந்தித்து நம்மை சுற்றியுள்ள மகிழ்ச்சியை கண்டுகொள்ளவே மறந்துவிடுகிறார்கள்.
பலருக்கும் அவர்கள் மீது அவர்களுக்கே வெறுப்பு?
இதன்காரணமாக மன அழுத்தம், பதற்றம் போன்ற பல புதிய புதிய நோய்களை சந்திக்கிறார்கள். மேலும் தங்கள் மீது தாங்களே வெறுப்பு கொள்கிறார்கள். 1000ல் சம்பாதிப்பவருக்கு 1000ல் பிரச்சனை இருக்கும், லட்சத்தில் சம்பாதிப்பவருக்கு லட்சத்தில் பிரச்சனை இருக்கும். இந்த உலகில் நிரந்தரமாக மகிழ்ச்சியானவர்கள், அவனுக்கு என்னப்பா பிரச்சனை சந்தோஷமாவே இருக்கிறான் என யாரும் இல்லை.
ஒரு பிறப்பு ஒரு இறப்பு
இந்த பிறவியில் மனிதனாய் பிறந்த நமக்கு அடுத்த பிறவி ஒன்று இருக்கிறதா என்றே தெரியாது. ஒரு பிறப்பு ஒரு இறப்பு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருப்போம், பிறரை மகிழ்ச்சியாக வைத்திருப்போம். குறைந்தபட்சம் நமது குடும்பத்தையாவது மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதற்கு முதலில் நீங்கள் உங்களை காதலிக்க வேண்டும்.
உங்களை நீங்களே எப்படி காதலிப்பது?
எதிர்மறையான சிந்தனை
எதிர்மறையான சிந்தனைகள் மனதில் ஓடும்போது, நமது மூளை எதிர்மறை சமிக்ஞைகளை எழுப்புகிறது. இது நமது தன்னம்பிக்கையை குறைக்கிறது.
எனவே எப்போதும் பாசிட்டிவாக சிந்தியுங்கள். நம்மால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது என மனதில் தன்னம்பிக்கை வையுங்கள். உங்கள் வலிமை மற்றும் சக்தியைப் புரிந்துகொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
நீங்களே உங்களுக்கு ஹீரோ
உங்களுக்கு பிடித்த நபராக மாறுவதற்கு பதிலாக, நீங்கள் இருக்க விரும்பும் நபராக ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்துப் பாருங்கள். ஏன் ஒருவரோடு நம்மை ஒப்பிட வேண்டும், அவரை போல் ஏன் நாம் வாழ வேண்டும். அவர் வாழ்க்கையை அவர் வாழ்ந்துவிட்டார். அதே வழியில் நாம் ஏன் போக வேண்டும்.

நமக்கான வழியை நாமே உருவாக்குவோம். காலங்கள் மாறிவருகிறது. நம் வழியில் பிறரை வர வைப்போம். உங்கள் மனைவியிடமோ, தாயிடமோ, காதலிப்பவரிடமோ, பிள்ளைகளிடமோ உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று கேட்கும் போது அவர்கள் வேறு ஒரு நபரை கை காட்டினால், உங்களுக்கு எப்படி சஞ்சலம் ஏற்படும்.
அதையே உங்களை உங்களுடன் ஒப்பிட்டு நீங்கள் நினைத்து கொள்ளுங்கள். கண்ணாடி முன்னாள் நின்று கேளுங்கள். உன்னையே உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு யாருக்கு உன்னை பிடிக்கும்.
வாழ்வாதார ஓட்டம்
இந்த காலக்கட்டத்தில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். காரணம் தங்கள் வாழ்வாதார நிலைதான். பெற்றோர்கள் எந்த சேமிப்பும் சேர்த்து வைக்காததால் குடும்ப பொறுப்பு தங்களுக்கு வந்து, அதை சமாளிக்க போராடுகிறார்கள்.
வாழ்க்கையில் கமிட்மென்ட் என்பது வரம்
வாழ்க்கையை நடத்துவதா? வாழ்வாதாரத்தில் முன்னேறுவதா? வாழ்க்கையை வாழுவது? என பலர் குழம்பி கண்விழி பிதுங்கியிருக்கிறார்கள். வாழ்க்கையை வாழுவது என்றால் என்ன, கமிட்மென்ட் எதுவும் இல்லாமல் இருப்பதா? அப்படி இருந்தால் எதற்கு நாம் வாழ வேண்டும். பெற்றோர்கள் சொத்து பெற்றோர் பெயரைதான் சொல்லும். உங்கள் குழந்தையிடம் இது உன் தாத்தா சொத்து என்று கூறினால் நீ என்ன செய்தால் அப்பா என கேட்கும்.
அதுவே நான் சம்பாதித்து வாங்குன சொத்து என கர்வத்தோடு உங்கள் குழந்தையிடம் சொன்னால். அது உங்களுக்கும் பெருமை உங்கள் குழந்தைக்கும் பெருமை. எனவே உங்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வாய்ப்பை உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்ததே வரம்தான். காலம் முழுவதும் உங்கள் பெயரை உங்கள் சுற்றார்கள் சொல்வார்கள்.
குடும்ப பொறுப்பு வரமா? சாபமா?
குடும்ப பொறுப்பு உங்களுக்கு இளம் வயதிலேயே வந்தால் பெருமைப்படுங்கள். இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும். உங்கள் சம்பாத்தியத்தில் பெற்றோருக்கு சாப்பாடு போடுவதை விட பெரும் மகிழ்ச்சியும் புன்னியமும் என்ன இருக்கிறது.
எந்த சேமிப்பும் இல்லாமல் உங்கள் மனைவியும், உங்கள் பிள்ளைகளும் தினசரி உங்கள் உழைப்பினால் வாழுகிறார்கள், வளருகிறார்கள். இதுவே பெருமையோடு கர்வம் கொள்ள வேண்டிய விஷயம்தான். சந்தோஷமாக உழைக்கலாம் குடும்ப பாரத்தை சுமக்கலாம்.
குடும்ப பொறுப்பை சுமந்து வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இன்னும் உங்களை நீங்களே பெருமையாக நினைக்க வேண்டும்.
குடும்ப பொறுப்பை சுமக்க புன்னியம் செய்திருக்க வேண்டும்
எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்ல வேண்டுமானால், மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு கமிட்மென்ட் ஏதும் இல்லை என்றால் அந்த கெட்ட பழக்கம் அதிகமாகி, அதுவே வாழ்க்கையாக மாறி, இளம் வயதிலேயே வாழ்க்கை தொலைந்துவிடும். அதை அளவாக வைக்கவே இந்த கமிட்மென்ட் என சிந்தியுங்கள். இதுவும் ஒரு பாசிட்டிவ் எண்ணம் தான்.
இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள்
தலைப்பை படித்தவுடன் தோன்றும், எங்கே வேலைக்கு போக தூங்க என நேரம் போகிறது. 1ம் தேதி சம்பளம் வருகிறது, 2ம் தேதி சம்பளம் முடிகிறது. இதில் எப்படி இயற்கையை என்ஜாய் செய்வது என தோன்றும்.
ஒரு மணிநேரம் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து சார்ஜ் போட்டால் அது நாள் முழுவதும் உழைக்கும். அதேபோல் தான் உங்கள் வாழ்க்கையும். சிரமத்தோடு சிரமமாக குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒருமுறை 3 அல்லது 4 நாட்கள் உங்களுக்கு பிடித்த இயற்கை எழில் மிகுந்த இடத்திற்கு பயணம் செய்யுங்கள்.
கொடைக்கானல், ஊட்டி, கேரளா சுற்றுலாத்தலம், கடல் பகுதி போன்ற உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் செய்யுங்கள். இது உங்களை ரீசார்ஜ் செய்ய உதவும்.
உடல் ஆரோக்கியம்
நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் சரி, தினசரி 1 மணிநேரம் அல்லது குறைந்தது 30 நிமிடம் உங்கள் உடலுக்காக ஒதுக்குங்கள். உடற்பயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சி ஏதாவது செய்யுங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தொப்பை, உடல் பருமனே உங்களை நெகிட்டிவாக சிந்திக்க வைக்கும். உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் அதுவே ஒரு பாசிட்டிவ் எனர்ஜிதான்.
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். அது நல்ல ஆரோக்கியமான விஷயமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பார்ப்போம். பிறரை காதலிப்பதற்கு முன் முதலில் உங்களை நீங்களே காதலியுங்கள். காதல் செய்வோம்.
Image Source: FreePik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version