Tulsi Mala Benefits: துளசி மாலை அணிவதில் இவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்கா?

  • SHARE
  • FOLLOW
Tulsi Mala Benefits: துளசி மாலை அணிவதில் இவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்கா?


Benefits Of Wearing Tulsi Mala: இன்று பலரும் மாலைகள் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. சிலர் மாலைகள் அணிவதை ஃபேஷனாகக் கருதுகின்றனர். இதில் ஏராளமான மாலைகள் உள்ளன. அந்த வகையில் துளசி மாலை பல்வேறு காரணங்களுக்காக அணியப்பட்டாலும், இது எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

பொதுவாகவே துளசி அறிவியல் குணங்களுக்காக மற்றும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. துளசி இலைகள் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். ஆயுர்வேதத்தில் பல்வேறு நன்மைகளைத் தரும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக துளசி அமைகிறது. இது சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு துளசி சிறந்த தீர்வு தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Body Massage Oil: உடலை ரிலாக்ஸா வைக்க இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்க

துளசி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் துளசி மாலை முக்கிய பங்கு வகிக்கிறது.

சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு

சளி, இருமல் மற்றும் சுவாச மண்டலத்தில் உள்ள நோய்த்தொற்றுக்களை நீக்குவதற்கான சிறந்த மூலிகைகளில் ஒன்று துளசி ஆகும். எனவே இது சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு சுவாச கோளாறு பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. குறிப்பாக மூச்சுத்திணறல் உள்ளிட்டபிரச்சனைகளை குணப்படுத்தவும், சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஆற்றல் மையங்களை சமப்படுத்த

உடலில் காணப்படும் ஆற்றல் மையங்கள் பொதுவாக சக்கரங்கள் என அழைக்கப்படுகிறது. உடல் முழுவதும் ஆற்றல் சீராக பரவுவதை உறுதி செய்ய துளசி மாலை உதவுகிறது. அதன் படி, துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதும் மூலம் சக்கரங்கள் சமநிலையை அடைகின்றன. மேலும் துளசியின் மணம் மற்றும் ஆன்மீக உட்பொருள்கள் போன்றவை சக்கரங்களை நேர்ப்படுத்தி, அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

கவனத்தை அதிகரிக்க

தியானம் செய்யும் போது, துளசி மாலை அணிவது கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. ஏனெனில், துளசியின் நறுமணம் தெய்வீக சக்தியுடன் தொடர்புடையதாகும். இந்த தெய்வீக சக்தியானது மனத்தெளிவு மற்றும் ஆழ்ந்த கவனிப்பை அதிகரிக்கிறது.

ஆன்மீக விழிப்புணர்வு

துளசி மாலை அணிவது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிவொளியை ஏற்றவும் உதவுகிறது. இந்த மாலை அணிவதன் மூலம் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கலாம். மேலும் இது ஆன்மீக செயல்பாடுகளில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வைப்பதுடன், உள்ளுணர்வைத் தருகிறது.

பாதுகாப்பிற்கான மாலை

மதங்களின் அடிப்படையில், இந்துக்கள் துளசி மாலை அணிவதை, அவர்களைப் பாதுகாக்கும் மூலிகையாக கருதுகின்றனர். ஏனெனில் துளசி மாலையில் ஆன்மீக பண்புகள் துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

நோயெதிர்ப்பை வலுப்படுத்த

துளசியானது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறு துளசி மாலையை அணிந்து கொள்வதன் மூலம், பொதுவான உடல் நலக்கோளாறுகளை தடுப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Night Bath: இரவு நேரத்தில் குளிப்பதில் இவ்வளவு நல்லது இருக்கா?

மன அழுத்தத்தைப் போக்க

துளசி அதன் நறுமணத்திற்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இது மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால் உடல் மற்றும் மனம் இரண்டுமே அமைதியடைகிறது. துளசி மாலையில் உள்ள மணிகளை தியானம் செய்யும் போது வைத்திருக்கும் போதோ அல்லது அணிந்திருக்கும் போதோ அச்சம், மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் குறைக்கப்பட்டு மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

துளசியில் உள்ள இயற்கையான குணங்கள் கழிவுகளை நீக்கும் மற்றும் சுத்தம் செய்யும் இயற்கை மூலிகையாகக் கருதப்படுகிறது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

நல்ல உறக்கத்திற்கு

துளசி மன அமைதியைத் தரக்கூடிய சிறந்த மூலிகையாகும். இது உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான உறக்கத்தைத் தருகிறது. எனவே உறங்கச் செல்லும் முன்னதாக துளசி மாலை அணிவது அல்லது தலையணைக்கு அடியில் துளசி மாலையை வைத்துக் கொள்வது போன்றவை மன அமைதியைத் தருவதுடன், உறக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

இவ்வாறு துளசி மாலை அணிவது பல்வேறு வழிகளில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!

Image Source: Freepik

Read Next

Brain Sharpening Tips: மூளைத் திறன் மேம்பாட்டிற்கு உதவும் டாப் பழக்க வழக்கங்கள்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்