விதை சிறிது.. பலன் பெரிது.. வயதை இழுத்து பிடிக்கும்.. இதயம் முதல் தோல் வரை காக்கும்.. சூரியகாந்தி விதை செய்யும் அற்புதங்கள் இங்கே..

சிறிய சூரியகாந்தி விதைகள் தோல் பிரகாசம், இதய நலம், எலும்பு பலம், நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல நன்மைகளை தரும் இயற்கை அற்புதம். தினமும் இதை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் எப்படி மேம்படும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம். 
  • SHARE
  • FOLLOW
விதை சிறிது.. பலன் பெரிது.. வயதை இழுத்து பிடிக்கும்.. இதயம் முதல் தோல் வரை காக்கும்.. சூரியகாந்தி விதை செய்யும் அற்புதங்கள் இங்கே..


"விதை சிறிது, பலன் பெரிது" என்ற பழமொழி உண்மையில் பொருந்தும் ஒரு உணவு – சூரியகாந்தி விதை. சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன. சூரியகாந்தி மலரிலிருந்து பெறப்படும் இந்த விதைகள் உலகம் முழுவதும் ‘சூப்பர் ஃபுட்’ என அழைக்கப்படுகின்றன.

சூரியகாந்தி விதையின் நன்மைகள்

அழகு ரகசியம்

சூரியகாந்தி விதையில் விட்டமின் E அதிகமாக உள்ளது. இது தோல் செல்களை சூரிய கதிர்கள், தூசி, மாசு போன்றவற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கும். தினமும் ஒரு கைப்பிடி அளவு விதைகளை சாப்பிடுவது, தோலுக்கு ஈரப்பதம் அளிக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் உதவும்.

artical  - 2025-08-14T191733.804

ஆரோக்கியத்தின் அடிப்படை

சூரியகாந்தி விதைகள் மக்னீசியம் மற்றும் செல்லினியம் நிறைந்தவை. இவை கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீராக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

எலும்பு மற்றும் தசை பலம்

இந்த விதைகளில் உள்ள கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் தசைகள் சீராக செயல்பட உதவும்.

மேலும் படிக்க: குடல் ஹெல்த்தியா இருக்க உங்க டயட்ல சேர்க்க வேண்டிய 3 பவர்ஃபுல் விதைகள் இங்கே

எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

சூரியகாந்தி விதைகளில் உள்ள Zinc மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இது சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகளை குறைக்கவும், உடல் விரைவில் குணமடையவும் உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

இதில் உள்ள விட்டமின் B6 நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியம். இவை நினைவாற்றலை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.

முடி வளர்ச்சி

சூரியகாந்தி விதையில் உள்ள புரதம், விட்டமின் E முடி வேர் பலம் பெறச் செய்யும். இது முடி உதிர்வு குறைக்கும் மற்றும் முடியை பிரகாசிக்கச் செய்யும்.

artical  - 2025-08-14T191902.539

எப்படி சாப்பிடலாம்?

* காலை உணவுடன் சேர்த்தல்

*ஸ்மூத்தியில் கலந்து குடித்தல்

* சாலட், ஓட்ஸ் மீது தூவி சாப்பிடுதல்

கவனிக்க வேண்டியது

* அதிக அளவில் சாப்பிட வேண்டாம் (ஒரு நாள் 30–40 கிராம் போதுமானது)

* உப்பு இல்லாத, வறுத்த விதைகளை தேர்வு செய்யவும்.

குறிப்பு

சூரியகாந்தி விதைகள் சிறியதாக இருந்தாலும், ஆரோக்கியத்துக்கு பெரும் பயன் தரும் இயற்கை வரம். இதை தினசரி உணவில் சேர்த்து, தோல் முதல் இதயம் வரை ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

Read Next

கிருஷ்ணர் ஜெயந்திக்கு விரதம் இருக்க போறீங்களா? வளமும் நலமும் பெற இப்படி விரதம் இருங்க

Disclaimer

குறிச்சொற்கள்