Boost gut health quickly with these 3 powerful seeds: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களுடன், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விதைகளைப் பொறுத்த வரை ஏராளமான விதைகள் உள்ளன. விதைகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இந்த உணவு நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. நார்ச்சத்துக்கள் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுவதுடன், குடலில் காணப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. இதில் ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான 'குடல் மருத்துவர்' என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சௌரப் சேத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலை உடனடியாக சுத்தம் செய்யவும் உதவும் விதைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
நிபுணரின் கருத்து
மருத்துவர் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றில், “இந்த 3 விதைகள் குடலை ஒரு தூரிகை போல சுத்தம் செய்யலாம்”, கழிவுகளை அகற்றலாம், வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரிக்கலாம் மற்றும் டல் நுண்ணுயிரியலை வளர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்
குடலை சுத்தம் செய்ய சிறந்த விதைகள்
சியா விதைகள்
சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இதை ஊறவைக்கும் போது, ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. நிபுணரின் கூற்றுப்படி, “சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. குடல் நுண்ணுயிரியை ஊட்டுகிறது மற்றும் நன்றாக மலம் கழிக்க உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “சியா விதைகளை உலர்வாக சாப்பிட கூடாது. சாப்பிடுவதற்கு முன், இரவு முழுவதும் இல்லாவிட்டாலும், குறைந்தது 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தயிர் அல்லது பாதாம்பாலில், சில பெர்ரிகளுடன் சேர்த்து, ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடலாம்” என கூறினார்.
துளசி விதைகள்
இந்த விதைகள் சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இவை சியா விதைகளைப் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால், இன்னும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. “இது வேகமாக விரிவடைந்து சியா விதைகளைப் போலவே கரையக்கூடிய நார்ச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமானத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என மருத்துவர் கூறினார்.
இந்த பதிவும் உதவலாம்: செரிமான பிரச்சனையை சரி செய்ய அடிக்கடி ENO குடிப்பீங்களா? அப்போ கண்டிப்பா இதை படியுங்க!
ஆளி விதைகள்
“ஆளி விதைகள் சிறியவை மற்றும் சக்தி வாய்ந்தவையாகும். இவை ஒமேகா-3 களில், குறிப்பாக ALA இல் நிறைந்துள்ளது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது” என்று கூறினார். ஆனால், உடல் முழு ஆளி விதைகளிலிருந்து அதிகம் உறிஞ்ச முடியாது. எனவே அவற்றை அரைக்க வேண்டும் என மருத்துவர் கூறினார்.
இது குறித்து மருத்துவர் சேதி அவர்கள்,”நறுக்கப்பட்ட ஆளி விதைகள் வீக்கம், ஹார்மோன் சமநிலை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நான் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை என் ஸ்மூத்தி அல்லது ஓட்மீலில் ஒரு தேக்கரண்டி அரைத்த ஆளி விதைகளைப் பயன்படுத்துகிறேன்” என மருத்துவர் சேதி குறிப்பிடுகிறார்.
விதைகளைச் சேர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்
- ஊட்டச்சத்து அதிகரிப்பிற்காக ஸ்மூத்திகள், தயிர் அல்லது ஓட்மீலில் விதைகளைச் சேர்க்கலாம்.
- சாலட்கள் அல்லது சூப்களுக்கு ஒரு டாப்பிங்காக இதைப் பயன்படுத்த வேண்டும்.
- கூடுதல் அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக பேக்கரி பொருட்களில் அரைத்த விதைகளைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.
- இந்த விதைகளை அன்றாட உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான குடலுக்கு உதவுகிறது.
- பயணத்தின்போது ஆரோக்கியமான விருப்பங்களுக்காக விதை அடிப்படையிலான எனர்ஜி பார்கள் அல்லது சிற்றுண்டிகளை உருவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் குடல் நலத்துக்கு தேவையான சிறந்த உணவுகள்!
Image Source: Freepik