குடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ்

அன்றாட உணவில் விதைகளைச் சேர்ப்பது நம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அவ்வாறு செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகள் உதவுகின்றன. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில விதைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ்


Healthy seeds for gut health: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்களுடன், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விதைகளைப் பொறுத்த வரை ஏராளமான விதைகள் உள்ளன. விதைகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ஏனெனில் விதைகளில் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இந்த உணவு நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. நார்ச்சத்துக்கள் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுவதுடன், குடலில் காணப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. இதில் ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான 'குடல் மருத்துவர்' என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சௌரப் சேத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலை உடனடியாக சுத்தம் செய்யவும் உதவும் விதைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்

நிபுணரின் கருத்து

டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது வீடியோவில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சக்திவாய்ந்த விதைகளைப் பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கின்றனர் என வெளிப்படுத்துகிறார்.

அவர் பதிவு செய்த வீடியோவில், “குடல் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்தக்கூடிய 5 சக்திவாய்ந்த விதைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான மக்கள் அவற்றை முற்றிலும் கவனிக்கவில்லை. இந்த அறிவியல் ஆதரவு விதைகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உங்கள் குடல் நுண்ணுயிரி, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ”வீக்கத்தைக் குறைப்பதில் இருந்து ஆரோக்கியமான பாக்டீரியாவை அதிகரிப்பது வரை, இந்த சிறிய சூப்பர்ஃபுட்கள் உதவுகின்றன. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் அன்றாட ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் மருத்துவர் பரிந்துரைத்த உணவில் சேர்க்கக்கூடிய விதைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சியா விதைகள்

குடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர் கூறியதில் முதலாவதாக சியா விதைகள் அமைகிறது. “இவை நார்ச்சத்து நிறைந்தவை ஆகும். இவற்றை ஊறவைக்கும் போது குடலூட்டும் ஜெல்லை உருவாக்கி, குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாவை ஊட்டுகிறது. இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது” என மருத்துவர் குறிப்பிடுகிறார். இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. குடல் நுண்ணுயிரியை ஊட்டுகிறது மற்றும் நன்றாக மலம் கழிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா இருந்தா பல பிரச்சனைகளைத் தள்ளி வைக்கலாம்.. அதுக்கு இந்த 6 ட்ரிங்ஸ் மட்டும் குடிங்க போதும்

ஆளிவிதைகள்

ஆளி விதைகளில் லிக்னான்கள் மற்றும் புரோபயாடிக் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், குடல் ஒழுங்கை ஆதரிக்கவும் உதவுகின்றன. மேலும் இது இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது.

பெருஞ்சீரக விதைகள்

பெருஞ்சீரக விதைகளில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் சேர்மங்கள் உள்ளன. இது வாயுவை நீக்க உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், சிறுகுடல் புண், பெருங்குடல் புண் என எதுவாக இருந்தாலும் பெருஞ்சீரக நீர் குடிப்பது நன்மை தருவதாகக் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

பூசணி விதைகள்

இவை உயர்தர நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இந்த வகை விதைகள் குடல் தடை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவுவதாக மருத்துவர் கூறுகிறார்.

சப்ஜா அல்லது துளசி விதைகள்

இந்த விதைகள் சியா விதைகளைப் போலவே தண்ணீரில் வீங்குகின்றன. ஆனால், இது குளிரூட்டும் விளைவையும் கொண்டுள்ளன. எனவே இது வயிற்று உப்புசத்திற்கு சிறந்ததாகும். மேலும் இது குடல் நுண்ணுயிரிகளுக்கு சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியமா இருக்க மருத்துவர் சொன்ன இந்த பழக்க வழக்கங்களை 21 நாள்கள் பின்பற்றுங்க

Image Source: Freepik

Read Next

ஆரோக்கியமான குடல் வேண்டுமா? அப்படியெனில் இந்த காலை உணவுகளை தவிர்க்கவும்! நிபுணர் அறிவுரை..

Disclaimer

குறிச்சொற்கள்