குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்

What foods should be avoided in monsoon season: பொதுவாக ஆரோக்கியமானதாக கருதப்படும் சில உணவுகள் பல்வேறு நேரங்களில் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படலாம். அவ்வாறு மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில் மழைக்காலத்தில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிடக்கூடாத உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்


Monsoon foods that may harm your gut health: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகும். ஆனால், சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் கூட நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, கோடைக்காலம், குளிர்காலம் போன்ற காலங்களில், அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப உணவுகளைச் சாப்பிடுவது அவசியமாகும். இல்லையெனில், அவை உடலில் எதிர்வினையை உண்டாக்கி, பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

அவ்வாறே, மழைக்காலத்தில் பெய்யும் மகிழ்ச்சியான மழை, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நமக்கு நிறைய நிவாரணத்தைத் தருகிறது. அதே சமயம், இந்த பருவத்தில் தொற்று மற்றும் காய்ச்சலின் அபாயமும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால், உணவுப் பொருள்கள் விரைவாக மாசுபடுகிறது. மேலும் இதை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மழைக்காலங்களில் செரிமான பிரச்சனைகள் ஏற்படுமா?

பொதுவாக, மழைக்காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக, வயிற்றில் சிறிது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிதானமான காலத்தில், நாம் பெரும்பாலும் தெரு உணவை அதிகம் சாப்பிட விரும்பலாம். ஆனால் இவை உடல்நல பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். எனினும், நாம் சாப்பிடுவது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருப்பின், நமது வயிற்று பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மான்சூன் சீசனில் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த காய்கறிகளை உங்க உணவில் சேர்த்துக்கோங்க

பருவமழை செரிமான அமைப்புக்கு ஏன் ஒரு பிரச்சனையாக அமைகிறது?

பருவமழையின் போது மாறிவரும் வானிலை மற்றும் அதிகரிக்கும் ஈரப்பதம் காரணமாக, செரிமான அமைப்பு பலவீனமாகலாம். இந்த ஈரப்பதம் காரணமாக உணவில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரலாம். மேலும் நீர் ஆதாரங்களும் மாசுபட ஆரம்பிக்கும்.

இந்நிலையில், உணவு மிக விரைவாக கெட்டுவிடும். திறந்த வெளியில் தயாரிக்கப்பட்ட அல்லது வைக்கப்படும் உணவில் ஆபத்தான பாக்டீரியாக்களின் சாத்தியக்கூறை அதிகரிக்கிறது. மேலும் இது வாய்வு, அஜீரணம், உணவு விஷம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, மழைக்காலத்தில் உடலின் செரிமான நெருப்பு பலவீனமடைகிறது. இது உணவு செரிமானம் அடையும் திறனைக் குறைக்கிறது.

குடல் ஆரோக்கியத்திற்கு மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பச்சை இலை காய்கறிகள்

பச்சை காய்கறிகளின் ஊட்டச்சத்து மதிப்பைப் பற்றி நாம் பலரும் அறிந்திருப்போம். ஆனால் மழைக்காலங்களில் இந்த இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், மழைக்காலங்களில் இதை உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

இவை சத்தானதாக இருப்பினும், பச்சை இலை காய்கறிகள் மற்றும் பச்சை சாலட்கள் அழுக்கு, பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் அழுக்கு மற்றும் ஈரப்பதம் காரணமாக, மண், பூச்சிகள் மற்றும் லார்வாக்கள் போன்றவை காய்கறிகள் ஒட்டிக் கொள்ளலாம். எனினும், இவை நன்கு கழுவிய பிறகும் கூட வெளியேறாது. எனவே இந்த பருவத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடுவது வயிற்று பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலங்களில் இந்த பழங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது..

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

குளிர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் புத்துணர்ச்சியூட்டுவதாக இருப்பினும், இவை செரிமானத்தை மெதுவாக்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இந்த பானங்கள் செரிமான நொதிகளின் செயல்பாட்டைக் குறைத்து, வீக்கம் மற்றும் வாயு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

எனவே, மழைக்காலங்களில் செரிமான அமைப்பு ஏற்கனவே பலவீனமாக இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது அவசியமாகும். மேலும் இவை ஊட்டச்சத்துக்கள் இல்லாததாகவும், நிறைய சர்க்கரையைக் கொண்டிருக்கிறது. இது உடலில் தாதுப் பற்றாக்குறை மற்றும் நீரிழப்பை ஏற்படுத்துகிறது.

பால் பொருட்கள்

மழைக்காலங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகலாம். குறிப்பாக அவை பேஸ்டுரைஸ் செய்யப்படாவிட்டால் விரைவாக கெட்டு விடும். ஈரப்பதம் காரணமாக, இனிப்புகள் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களில் விரைவாக பூஞ்சை காளான் உருவாகும். இதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகிறது.

எனவே மழைக்காலங்களில் இவற்றைச் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். எனினும், பால் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டால், நம்பகமான முறையில் பெறப்படும் புதிய மற்றும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். இது தவிர, பால் பொருட்களுக்கு பதிலாக ஓட்ஸ் பால் அல்லது பாதாம் பால் போன்ற தாவர அடிப்படையிலான பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெரு சிற்றுண்டி

பகோடாக்கள், பானி பூரி போன்ற தெரு சிற்றுண்டிகளை மழைக்காலத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது சுவையைத் தருவதாக இருப்பினும், உடலுக்கு கேடு விளைவிக்கும். ஏனெனில், இந்த பொருள்களின் விற்பனையில் பெரும்பாலும் தூய்மை கடைபிடிக்கப்படுவதில்லை. இதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசுபட்டிருக்கலாம் அல்லது ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

இவை ஆபத்தானதாகவும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறுகிறது. சாலையோரங்களில் திறந்தவெளியில் விற்பனை செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இனிப்பு வகைகளில் தூசி, பூச்சிகள் போன்றவற்றால் மாசுபடலாம். இதை சாப்பிடுவது உணவு விஷம் மற்றும் வயிற்று தொற்று அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது.

பருவக்காலம் மிகவும் இனிமையானதாக காலமாகும். எனினும், இவை நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு சவாலாக அமைகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த காலத்தில், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த தவறுகள் மழைக்காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.. தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்..

Image Source: Freepik

Read Next

Ginger Juice Benefits: எடை குறைய, ஆரோக்கியம் கூட தினசரி காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு இப்படி குடிக்கவும்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version