ரெய்னி சீசனில் நீங்க மறந்தும் இந்த பழங்களைச் சாப்பிடாதீங்க! அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்

Which fruits should I avoid in the monsoon: மழைக்காலம் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், தொற்றுக்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமானதாக இருப்பினும், இந்த காலநிலையில் சில பழங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத பழங்கள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ரெய்னி சீசனில் நீங்க மறந்தும் இந்த பழங்களைச் சாப்பிடாதீங்க! அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்


Fruits should avoid during the rainy season: கோடைக்கால வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக மழைக்காலம் அமைகிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் நோய்த்தொற்றுக்கள், பாக்டீரியாக்கள், நீர்வழி நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவை அதிகரிக்கும் அபாயம் உண்டாகலாம். இந்த பருவத்தில் சில உணவுகளை உட்கொள்வது பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கலாம். குறிப்பாக, பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஆனால், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய சில பழங்கள் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மழைக்காலத்தில் பெரும்பாலும் மோசமான செரிமானம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியைச் சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகள் வராமல் தவிர்க்க அன்றாட உணவில் நாம் சாப்பிடக்கூடாத சில பழங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல செரிமானத்திற்கு தினமும் 2 கிவி போதும்..

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் அதிகளவிலான நீர் உள்ளது. மேலும், இது கோடைக்காத்திற்கு ஏற்றதாகும். ஆனால், பருவமழைக்கு ஏற்றதாக இருக்காது. குறிப்பாக, இதில் உள்ள அதிகப்படியான நீர் உள்ளடக்கம் காரணமாக, இதை சரியாக சேமிக்கப்படாவிட்டால் அல்லது கையாளப்படாவிட்டால், வீக்கம், அஜீரணம் அல்லது வயிற்று தொற்று போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

இது அதிக ஈரப்பதம் கொண்ட பழமாக இருப்பதால் மழைக்காத்தில் பாக்டீரியா மாசுபாட்டிற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், தர்பூசணிக்கு மாற்றாக மாதுளையை முயற்சிக்கலாம். மாதுளை ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது மற்றும் செரிமானத்திற்கு ஏற்றதாகும்.

அதிகமாக பழுத்த வாழைப்பழங்கள்

பொதுவாக, வாழைப்பழங்கள் உடலுக்குத் தானே தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், மழைக்காலங்களில் அதிகமாக பழுத்த வாழைப்பழங்கள் விரைவாக புளிக்க வைத்து, ஈக்களை ஈர்ப்பதாக அமைகிறது. மேலும், இதில் காணப்படும் அதிக ஈரப்பதம், பாக்டீரியா தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது.

மழைக்காலத்தில் இதை உட்கொள்வதால் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, புதிய, உறுதியான வாழைப்பழங்களை மிதமான அளவில் சாப்பிடலாம். இது தவிர, பேரிக்காய் அல்லது கொய்யா போன்ற வேகவைத்த பருவகால பழங்களை சாப்பிடலாம்.

திராட்சை

திராட்சை பழம் மெல்லிய தோல்களைக் கொண்டதாகும். எனவே இதை முழுமையாக சுத்தம் செய்வது பெரும்பாலும் கடினமாகும். இதன் காரணமாக, பூஞ்சை வளர்ச்சி மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை இரண்டுமே ஈரப்பதமான பருவமழை மாதங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த காலநிலையில் இதை உட்கொள்வது வயிற்று வலி மற்றும் பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்துகிறது. எனினும், இதற்கு மாற்றாக ஆப்பிள்கள் அல்லது பப்பாளிகள் சுத்தம் செய்ய எளிதானது மற்றும் சாப்பிடுவது பாதுகாப்பானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes avoid fruits: உங்களுக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கா? அப்ப நீங்க மறந்தும் இந்த பழங்களை சாப்பிடாதீங்க

அன்னாசிப்பழம்

இது ஒரு சுவையான மற்றும் நீரேற்றம் தரும் வெப்பமண்டல பழம் ஆகும். இவை தொண்டை எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், இது சளி அல்லது இருமல் அறிகுறிகளை மோசமாக்குகிறது. இது மழைக்காலத்தில் உடல் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இந்த காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது சளி உற்பத்தியை அதிகரிக்கவும், சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்துகிறது. எரிச்சல் இல்லாமல் வைட்டமின் சியை அதிகரிக்க ஆரஞ்சு அல்லது இனிப்பு எலுமிச்சையைத் தேர்வு செய்யலாம்.

பெர்ரிகள்

பெர்ரி பழங்கள் மென்மையானவை மற்றும் தண்ணீரை எளிதில் உறிஞ்சக்கூடிய பழங்களாகும். குறிப்பாக, இந்த பழங்கள் மழைக்காலங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகிறது.

மழைக்காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது உணவு மூலம் பரவும் நோய் மற்றும் வயிற்று வலி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு மிதமான அளவில் பேரிச்சம்பழம் அல்லது அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பழங்கள் ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத பகுதியாகும். ஆனால், பருவகால விழிப்புணர்வு முக்கியமானதாகும். மழைக்காலத்தின் போது, இந்த வகைப் பழங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும், உடல் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்க திற்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: When To Eat Fruits: ஒரு நாளைக்கு எத்தனை முறை பழங்கள் சாப்பிட வேண்டும்?

Image Source: Freepik

Read Next

காலை எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க

Disclaimer