Pulses to avoid during rainy season: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவு வகைகள் உள்ளன. இதில் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருப்பு வகைகள் முதல் உலர்ந்த பீன்ஸ், பட்டாணி என பல்வேறு உணவுப் பொருள்கள் கறிகள், சாலட்கள் மற்றும் சூப்கள் போன்ற பல்வேறு உணவுகளாகத் தயார் செய்யப்படுகின்றன. பொதுவாக பருப்பு வகைகளில் குறைந்த அளவிலான கொழுப்புகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
பருப்பு வகைகளைப் பொறுத்த வரை எந்த நேரத்திலும் அல்லது எந்த பருவத்திலும் சாப்பிடலாம். ஆனால், மழைக்கால சூழ்நிலையில் சில பருப்பு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பொதுவாக மழை பெய்யும் போது, அதிக ஈரப்பதம் காரணமாக செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம். இந்நிலையில், மழைக்காலத்தில் நாம் சரியாக சாப்பிடவில்லை எனில் வாயு, வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதில் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய சில பருப்பு வகைகள் குறித்து காணலாம்.
பருப்பு வகைகள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, பருப்பு வகைகள் உலர்ந்த விதைகளுக்காக மட்டுமே அறுவடை செய்யப்படுபவையாகும். இது பீன்ஸ், பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி மற்றும் காய்களுக்குள் வளரும் பிற சிறிய, வட்ட விதைகளைக் குறிக்கிறது. பொதுவாக, பருப்பு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pulses For Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் 4 பருப்பு வகைகள் ஏவை? எப்படி சாப்பிடணும்?
மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய பருப்பு வகைகள்
மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகரிப்பின் காரணமாக செரிமான அமைப்பு பாதிக்கப்படும். இதனால் சில பருப்பு வகைகள் அதிக சத்தானதாக இருந்தாலும், இந்த காலத்தில் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் ஈரப்பதமான காலநிலையில் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவாக உட்கொள்ளப்படும் பருப்பு வகைகளைக் காணலாம்.
பீன்ஸ் அல்லது ராஜ்மா
பீன்ஸில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்பு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், நீண்டகால ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. மேலும், இவை எடை இழப்புக்கும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், எடை இழப்பு உணவில் பங்கேற்பாளர்களாக 30 பருமனான பெரியவர்கள், பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகளை வாரத்திற்கு நான்கு முறை சாப்பிடுவது, பீன்ஸ் இல்லாத உணவை விட அதிக எடை இழப்புக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் இதை உட்கொள்வது மெதுவாக செரிமானம் காரணமாக வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கடலைப் பருப்பு
கடலைப் பருப்பில் புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளது. இவை கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மழைக்காலத்தில் இந்த பருப்பு உட்கொள்வது அஜீரணம் மற்றும் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். எனவே, செரிமான செயல்முறைகள் மெதுவாக இருக்கும்போது சாப்பிடுவதற்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்காது.
இந்த பதிவும் உதவலாம்: Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?
உளுத்தம்பருப்பு
இதில் புரதம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நூறு கிராம் அளவிலான உளுத்தம்பருப்பில் 24 கிராம் புரதம் உள்ளதாக அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகின்றன. மேலும் இது ஆற்றலை அதிகரிக்கவும், தசையை வளர்க்கவும் உதவுகிறது. உளுந்து பருப்பு சாப்பிடுவது வயிறு கனமான உணர்வைத் தருவதாகவும், ஜீரணிக்க கடினமாகவும் இருக்கும். எனவே இது ஈரப்பதமான வானிலையில் அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
கொண்டைக்கடலை
இதில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதில் பாலியோல்கள், நொதிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் சிக்கலான சர்க்கரைகள் போன்றவை உள்ளன. இவை ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
மசூர் பருப்பு
இந்த வகை பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பை நிர்வகிப்பதற்கும் ஒரு நல்ல உணவு விருப்பமாக அமைகிறது. மேலும் இதில் ஜீரணிக்க கடினமாக இருக்கும் ரஃபினோஸ் மற்றும் ஸ்டாக்கியோஸ் போன்ற சர்க்கரைகள் இருப்பதால் வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pulses Cause Gas: இந்த பருப்புகளை சாப்பிட்டால் அசிடிட்டி ஏற்படுமாம்!
Image Source: Freepik