Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?


Best Pulses For Diabetic Patients: உணவுமுறை மாற்றங்களின் உதவியுடன் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். ஆனால், நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் உணவுமுறைகள் பல வகைகள் உள்ளன. அதன் படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஒவ்வொரு உணவில் கண்டிப்பாக பருப்பு வகைகளை இணைப்பது அவசியமாகும்.

இன்று பெரும்பாலானோர் அனைத்து வகையான பருப்பு வகைகளையும் எடுத்துக் கொள்வர். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பருப்பு வகைகள் என்னென்ன இருக்கும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிகளவிலான புரதம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது இரத்தத்தில் குளுக்கோஸாக உடைக்கப்படுவதை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

இந்த பதிவும் உதவலாம்: Mango For Diabetes: மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது!!

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பருப்பு வகைகள்

ஆராய்ச்சியில் பருப்பு வகைகளில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

கிட்னி பீன்ஸ் (ராஜ்மா)

சர்க்கரை நோயாளிகள் கிட்னி பீன்ஸ் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது. இது குறைந்தளவிலான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது. மேலும் ராஜ்மாவில் கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பியுள்ளது. மேலும் இது எளிய கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை விட சிறந்ததாகும்.

வங்காள கிராம் (Bengal Gram)

சனா பருப்பு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது “கருப்பு சனா” அல்லது கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, ஜிங்க் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது மிகக் குறைந்த அளவிலான இரத்த சர்க்கரை குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கிறது.

உளுத்தம்பருப்பு

இது ஆரோக்கியமான புரதங்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. உமி நீக்கிய உளுந்து பருப்பு உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உளுத்தம்பருப்பில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், நீரிழிவு நோயாளிகள் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க பயனுள்ளதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை அளவு திடீர்னு உயர்ந்து இருக்கா? என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க

பச்சைப்பயறு (Moong Dal)

பச்சைப்பயறு புரதங்களால் நிறைந்துள்ள சிறந்த பருப்பு வகையாகும். இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது. 50-க்கும் குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட எந்தவொரு உணவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதாகும். அதே போல, பச்சைப்பயறு 38 கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது நீரிழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கொண்டைக்கடலை

1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு காணப்படுகிறது. கூடுதலாக கொண்டைக்கடலையில் ஸ்டார்ட் அமிலோஸ் உள்ளது. இதன் மூலம் உடல் கொண்டைக்கடலையின் சத்துக்களை படிப்படியாக உறிஞ்சி செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் திடீர் இன்சுலின் அதிகரிப்பை தடுக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இந்த பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes and Sleep: எச்சரிக்கை! தூக்கமின்மையால் ஏற்படும் நீரிழிவு நோய், எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

Mango For Diabetes: மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது!!

Disclaimer