Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க

  • SHARE
  • FOLLOW
Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கலாம். நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பானங்களைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Jackfruit For Diabetes: சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பலாப்பழம். எப்படி சாப்பிடணும் தெரியுமா?

நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்

ஆம்லா சாறு

இந்திய நெல்லிக்காய் எனப்படும் ஆம்லா பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பழமாகும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

துளசி டீ

துளசி இலைகள் நீரிழிவு எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. புதிய துளசி இலைகளைத் தேநீரில் சேர்த்து அருந்தலாம். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கற்றாழை சாறு

சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் சிறிய அளவு கற்றாழை சாற்றைக் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை சீராக்கலாம்.

வெந்தய நீர்

வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முந்தையை நாள் இரவில் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை அடுத்த நாள் குடிப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Papaya For Diabetes: பப்பாளி சாப்பிட்டா சர்க்கரை அளவு கூடுமா? குறையுமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

இலவங்கப்பட்டை டீ

இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ள பல்வேறு ஆரோக்கிய பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இலவங்கப்பட்டையை தேநீரில் காய்ச்சி அருந்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

எலுமிச்சை கலந்த சூடான நீர்

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சேர்த்து குடிக்க உடல் நச்சு நீக்கம் அடைகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தலாம்.

தினந்தோறும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்த பானங்களை அருந்துவதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Coffee: சர்க்கரை நோயால் அவதியா? ஒரே மாதத்தில் குணமாக தினமும் இந்த டீயை குடியுங்க!

Image Source: Freepik

Read Next

Foods for Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சூப்பர் புட்!

Disclaimer