Jackfruit For Diabetes: சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பலாப்பழம். எப்படி சாப்பிடணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Jackfruit For Diabetes: சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பலாப்பழம். எப்படி சாப்பிடணும் தெரியுமா?


Can Diabetic Patient Eat Jackfruit Seeds: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பிற உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தவிர்க்க, அன்றாட வாழ்க்கைமுறையில் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும்.

அந்த வகையில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களில் பலாப்பழமும் அடங்கும். நிபுணர்கள் பலரும், நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை அளவைக் குறைக்க நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தின் மாவை எடுத்துக் கொள்வார். இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் பலா மாவு குறித்து உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Walking For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கணும் தெரியுமா?

ஏன் பலாப்பழ விதை?

பலாப்பழ விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களே, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது. பலாப்பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இது தவிர, பலாப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கு உதவும் பலாப்பழ விதை

சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வாறு பலாப்பழ விதை உதவுகிறது என்பது குறித்துக் காணலாம்.

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த

பலாப்பழ விதைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பலாப்பழ விதை மாவில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

உயர் நார்ச்சத்து

பலாப்பழ விதைகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுப்பதே இதற்குக் காரணமகும். மேலும், கார்போஹைட்ரேட்டுகள் உறிஞ்சுதலையும் மெதுவாக்குகிறது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிகல் பிரச்சனைக்கு பலா மாவு பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Benefits for Diabetes: சர்க்கரை நோயாளிகள் பீட்ருட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? - ஷாக்கிங் ரிசல்ட்!

புரதம் நிறைந்த

பலாப்பழ விதைகள் புரதச்சத்து மிக்கதாகும். இவை உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்தி குளுக்கோஸ் அளவை சரியாகப் பயன்படுத்த உதவுகிறது. மேலும், தசைகளை வலுப்படுத்துவதற்கு பலாப்பழம் சிறந்த தேர்வாகும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பலா மாவு உட்கொள்வது கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின், ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ் மற்றும் போஸ்ட்ராண்டியல் குளுக்கோஸ் போன்றவற்றைக் குறைக்கிறது.

பலாப்பழ மாவு தயாரிக்கும் முறை

பலாப்பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவு சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும். எனினும் இதை வீட்டிலேயே செய்யலாம்.

  • இதற்கு முதலில் பலாப்பழ விதைகளை எடுத்து உலர வைக்க வேண்டும்.
  • பின், அவை காய்ந்ததும் அதன் தோலை நீக்கி அரைக்கலாம்.
  • இந்த பலா மாவை கோதுமை மாவுடன் கலந்து பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகம் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான இன்னும் பிற நோய்களால் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் உணவு முறை மாற்றம் மற்றும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். எனினும், நீரிழிவு நோய் கடுமையாக இருப்பின், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Ragi for Diabetes: நீரிழிவு நோயாளிகள் ராகியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்

Image Source: Freepik

Read Next

Sugar Alternatives: சுகர் ஃப்ரீ எதுக்கு?… வெள்ளை சர்க்கரைக்கு பதிலா இவற்றை பயன்படுத்துங்க!

Disclaimer

குறிச்சொற்கள்