Walking For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Walking For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கணும் தெரியுமா?

ஏனெனில் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். சிறந்த முடிவுகளைப் பெற சீரான உணவு, இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்றவற்றுடன் வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Hearing Loss: சர்க்கரை நோய் கேட்கும் திறனை பாதிக்குமா? நிபுணர் தரும் விளக்கம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான நடைபயணம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். எனவே நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதன் படி, நீரிழிவு நோயாளிகள் தோராயமாக ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடக்கலாம். இது பயனுள்ள இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

நடைபயிற்சிக்கான நேரம் மற்றும் தூரம்

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் உடற்பயிற்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஏரோபிக் மற்றும் காற்றில்லா உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் எளிதான பயிற்சியாக அமைவது நடைபயிற்சி ஆகும். அதன் படி ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 அடிகள் நடக்கலாம் அல்லது குறைந்தது தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சிறந்ததாகும்.

இதில் சிலருக்குத் தொடர்ந்து அரை மணி நேரம் நடப்பது சிரமமாக இருக்கலாம். எனவே, காலை 10 நிமிடம், மதியம் 10 நிமிடம் மற்றும் மாலை 10 நிமிடம் என்ற வகையிலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். எனினும் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைப் பொறுத்து உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?

நீரிழிவு நோயாளிகள் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இதில் சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

  • நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் ஐந்து நாள்கள் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்வது உடலில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் குறைக்கவும் உதவுகிறது.
  • நடக்கும் போது செயல்படும் அசைவுகள் தசைச் சுருக்கங்கள் மற்றும் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
  • எனினும் மக்கள் அதிகப்படியான கொழுப்பைப் பெறும் போது அல்லது மிகவும் உட்கார்ந்திருக்கும் போது சர்க்கரையைக் கொண்டு செல்லத் தேவையான இன்சுலின் அளவு உயர்கிறது. போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இரத்த சர்க்கரை உயரலாம். இதனைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
  • இதில் உணவுக்குப் பிறகு நடைபயணம் மேற்கொள்வது 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

இது போன்ற பல்வேறு நன்மைகள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு பராமரிப்பு முறையில் மிதமான தீவிரம் கொண்ட உடல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: High Protein In Diabetes: அதிக புரத உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வளவு ஆபத்தா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க

Image Source: Freepik

Read Next

டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிடவும்..

Disclaimer