டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிடவும்..

  • SHARE
  • FOLLOW
டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிடவும்..

அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எந்த உணவுகளை விலக்கி வைக்க வேண்டும்? எந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்? என்பதை இங்கே காண்போம். 

விலக்கி வைக்க வேண்டிய உணவுகள்..

அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.  இவற்றில் குளுக்கோஸ் அளவு அதிகமாக உள்ளது. இந்த உணவை சாப்பிட்ட உடனேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அதனால்தான் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் இந்த வகை உணவை குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: Diabetes Diet: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 காலை உணவு விருப்பங்கள்

சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. மேலும் மாம்பழம் மற்றும் வாழைப்பழம் சாப்பிடும் போது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது. அதுமட்டுமின்றி மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

வகை-2 நோயாளிகள், மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட சில வகையான பழங்களை உட்கொள்ளலாம். பெர்ரி மற்றும் கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் அவற்றை தங்கள் உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

முழு தானியங்களையும் அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால், சர்க்கரை அளவு ஓரளவு கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது. அரிசியைப் பொறுத்தவரை, உங்கள் உணவில் வழக்கமான அரிசியை விட பாஸ்மதி மற்றும் பிரவுன் ரைஸைச் சேர்ப்பது நல்லது.

மேலும் பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள், முட்டை, தயிர் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு புரதத்தை உதவுகிறது. இது இரத்தத்தில் கார்போஹைட்ரேட்டின் விளைவைக் குறைக்கிறது.

பின் குறிப்பு

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே மருத்துவ நிலையில் இருந்தாலோ, இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெறுவது நல்லது. 

Image Source: Freepik

Read Next

Ice Apple for Diabetes: சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

Disclaimer

குறிச்சொற்கள்