Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Doctor Verified

Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?

Essential Oils For Diabetes Headache: சிறியவர்கள், பெரியவர்கள் என பாராமல் அனைவரும் அனுபவிக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்றாகவே தலைவலியும் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படலாம். ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பின், அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அசாதாரணமாக மாறிவிடும். இதன் காரணமாக மன அழுத்தம், உடல் பருமன், தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மேலும், மூளையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்படலாம்.

இந்த தலைவலியிலிருந்து விடுபட சிலர் மருந்துகளை எடுத்துக் கொள்வர். மருந்து எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள், சில அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவர். இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் தாவரங்களிலிருந்து செறிவூட்டப்பட்ட சாறுகளாகும். இவை ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

நீரிழிவு தலைவலியைக் குணமாக்க உதவும் எண்ணெய்கள்

இந்த அத்தியாவசிய எண்ணெய்களின் நறுமணம் உடல் ஏற்றுக் கொள்ளும் போது, சுவாசம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், மற்றும் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். இதில் தலைவலியைப் போக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் உள்ள பிராஞ்சல் ஆயுர்வேத கிளினிக்கின் மருத்துவர் மணீஷ் சிங் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

பாதாம் எண்ணெய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையைச் சந்திக்கலாம். இந்த தலைவலியைக் குணமாக்க பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு கடாய் ஒன்றில் கிராம்பு சேர்த்து லேசாக சூடாக்கி பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின், இந்த கிராம்பு பொடியை எண்ணெயுடன் கலக்க வேண்டும். இந்த கலவையை தலையில் தடவினால், தலைவலி நீங்கி விடும்.

லாவண்டர் எண்ணெய்

இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் நிறைந்துள்ளன. இந்த லாவண்டர் எண்ணெயைப் பயன்படுத்துவது வலியைப் போக்க உதவுகிறது. மேலும், இந்த எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த லாவண்டர் எண்ணெயைத் தவிர, கெமோமில் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Foot Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய நீரிழிவு பாத நோய் அறிகுறிகள்

புதினா எண்ணெய்

இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது மன அழுத்தம் மற்றும் தலைவலியை நீக்க உதவுகிறது. புதினா எண்ணெயில் மெந்தோல் உள்ளது. இதைத் தலையில் தடவுவது வலியை நீக்கி லேசான உணர்வைத் தருகிறது. இதற்கு புதினா இலைகளை எண்ணெயுடன் வேகவைத்து, வீட்டிலேயே புதினா எண்ணெயைச் செய்யலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சில நிமிடங்களிலேயே தலைவலியைப் போக்க உதவுகிறது. இந்த யூகலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையும். இது வீக்கம் பிரச்சனையை நீக்க உதவுகிறது. மேலும், இதன் சில துளிகள் தசை வலியினைப் போக்க உதவுகின்றன.

மெகந்தி எண்ணெய்

ஹென்னா குளிர்ச்சித் தன்மை கொண்டதாகும். இதனைத் தலைக்குத் தடவுவது, குளிர்ச்சியான உணர்வ ஏற்படுத்தும். மெஹந்தி எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரணி பண்புகள் போன்றவை உள்ளன. இந்த எண்ணெயைப் பயன்படுத்தி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை நீக்கலாம். மேலும், மருதாணி எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால், குளிர் காலங்களில் இந்த எண்ணெயைத் தலையில் தடவாமல், நெற்றியில் மட்டும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இல்லையெனில், சளி பிடிப்பதற்கு வாய்ப்புண்டு.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Symptoms: பெண்களே இந்த அறிகுறிகளை கவனிப்பது அவசியம்.. நீரிழிவு நோய் எச்சரிக்கை!

நீரிழிவு தலைவலிக்கு அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தும் முறைகள்

  • அத்தியாவசிய எண்ணெய்களை தோலில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • இவற்றை சில கேரியர் எண்ணெயுடன் கலந்து மட்டுமே பயன்படுத்தலாம்.
  • இந்த கலவையைக் கொண்டு தலையை மசாஜ் செய்யலாம்.
  • தலைவலி நீங்க, சுத்தமாக கைக்குட்டையில் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் தெளித்து, அதை வாசனை செய்யலாம்.
  • ரூம் ப்ரெஷ்னருடன் சில துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
  • தூங்கும் முன் அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை தலையணையில் தெளிக்கலாம்.

நீரிழிவு தலைவலிக்கான சிகிச்சை: நீரிழிவு காரணமாக தலைவலி ஏற்பட்டால், மேலே கூறப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்

Image Source: Freepik

Read Next

Diabetes Reason: அதிக தொப்பையும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும் தெரியுமா? உண்மை இதோ!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content