Green Juice For Diabetics: உலகளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாக நீரிழிவு நோய் அமைகிறது. பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உணவு முறைகள் மற்றும் மருந்துகளை சரியான முறையில் கடைபிடிப்பது அவசியம். அதன் படி சில பச்சைச் சாறுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருவதாக அமைகின்றன. குறிப்பாக பச்சைச் சாறுகளில் நார்ச்சத்துகள், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் பச்சைச் சாறுகள்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் மூன்று பச்சைச் சாறுகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
பாகற்காய் சாறு
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காய் உடல் நல ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவை நீரிழிவு நோய்க்கு பாரம்பரிய தீர்வாக அமைகிறது. இன்சுலினைப் பிரதிபலிக்கும் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும் கலவைகளை பாகற்காய் கொண்டுள்ளது. பாகற்காய் மிகவும் கசப்பாக இருப்பதால், அதனுடன் சிறிதளவு இனிப்பு சேர்ந்து அருந்தலாம் அல்லது லேசான சுவைக்காக மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Vegan Diet: சர்க்கரை நோயாளிகள் தாவர அடிப்படையிலான உணவை உண்ணலாம்?
வெள்ளரி மற்றும் செலரி சாறு
செலரி, வெள்ளரி சாறு இரண்டும் நீரேற்றம் மிகுந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறிகள் ஆகும். இவை ஜூஸ் செய்வதற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இவற்றில் உள்ள அதிகளவிலான நீர் மற்றும் நார்ச்சத்துக்கள், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் ஆனது மக்னீசியத்தின் நல்ல மூலமாகும். மேலும் செலரியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன.
கீரை மற்றும் கேல் ஜூஸ்
கீரை வகைகளான பசலைக் கீரை மர்றும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன. இலை கீரைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இவை இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வழக்கமான கீரை மற்றும் பரட்டைக் கீரை சேர்த்து ஜூஸ் செய்வது இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாக பாதிக்காமல் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.
பச்சைச் சாறுகள் தயாரிக்கும் போது புதிய மற்றும் கரிமப் பொருள்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் இனிப்புகள் அல்லது அதிப்படியான பழங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பச்சைச் சாறுகளை எடுத்துக் கொள்ளும் முன் நிபுணர்களை அணுகி இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு பச்சைச் சாறுகள் மதிப்பு மிக்க நன்மைகளைத் தருவதாக இருந்தாலும், காய்கறிகள், பழங்கள், போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மாற்றக்கூடாது. இதனுடன், நீரிழிவு நோயை நிர்வகிக்க உடற்பயிற்சி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும், நீரிழிவு நோய்க்கு குறிப்பிடத்த மாற்றங்களைச் செய்யும் முன், சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Care In Monsoon: மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எதில் கவனம் செலுத்தனும்?
Image Source: Freepik