Yoga for Diabetes: எகிறும் சுகர் லெவலை சரசரவென குறைக்கும் யோகாசனங்கள் இங்கே

இன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை, மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Yoga for Diabetes: எகிறும் சுகர் லெவலை சரசரவென குறைக்கும் யோகாசனங்கள் இங்கே

Which asana is good for diabetes: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு நோயும் அடங்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நீரிழிவு நோயைச் சந்திக்கின்றனர். நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் என்பது இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும். இதில் உடலில் இன்சுலின் இல்லாத போது அல்லது கணையம் போதுமான இன்சுலினை உருவாக்காதபோது நீரிழிவு நோயைச் சந்திக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களின் உணவுமுறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் மற்றும் பானங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து சேதத்தை ஏற்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் சில யோகாசனங்கள் உதவுகிறது. அந்த வகையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில யோகாசங்கள் உதவுகிறது. இதில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for belly fat: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாக குறைக்கும் சூப்பர் யோகாசனங்கள்!

நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய சிறந்த யோகாசனங்கள்

தனுராசனம்

வில் ஆசனம் என்றழைக்கப்படும் தனுராசனம் இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும் கணையத்தைத் தூண்ட உதவுகிறது. இன்சுலின் ஆனது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனம் வயிற்று தசைகளை நீட்ட உதவுகிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும் முடியும்.

பச்சிமோத்தனாசனம்

பச்சிமோத்தனாசனம் என்றழைக்கப்படும் இந்த ஆசனம் ஆனது முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் தொடை எலும்புகளை நீட்ட உதவுகிறது. இது சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்றவற்றைத் தூண்டுகிறது. இந்த ஆசனம் செய்ய, முன்னோக்கி குனியும்போது செரிமானம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தக் கூடிய வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்ய உதவுகிறது.

சவாசனா

சவாசனா என்பது ஒரு எளிய ஆசனம் ஆகும். இது மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் ஓய்வெடுப்பதற்கு முக்கியமானதாகும். இவை கார்டிசோலின் அளவைக் குறைக்கவும், மன அழுத்தத்தால் ஏற்படும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வழக்கமான தளர்வு நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.

ஹலாசனா

கலப்பை போஸ் என்றழைக்கப்படும் ஹலாசனாவில், வயிற்றை அழுத்தி, கணையத்தைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது தோள்கள் மற்றும் முதுகெலும்பை நீட்டுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோய் இருந்தால் ஜிம்முக்கு போகலாமா? மருத்துவரின் கருத்து என்ன?

பலாசனா

குழந்தை போஸ் என்றழைக்கப்படும் பலாசனா செய்வது மன அழுத்தத்தை குறைக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கணையத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டவும் உதவுகிறது. இதன் மூலம் இன்சுலின் உற்பத்தி மேம்படுத்தப்பட்டு, சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

புஜங்காசனம்

கோப்ரா போஸ் என்றழைக்கப்படும் புஜங்காசனம் செய்வது முதுகெலும்பை வலுப்படுத்தவும், வயிற்று உறுப்புகளைத் தூண்டவும் உதவுகிறது. மேலும் இவை இரத்த ஓட்டத்திற்கு உதவுவதாகவும், கணையத்தைத் தூண்டவும் உதவுகிறது. இவை இறுதியில் இரத்த குளுக்கோஸைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சேது பந்தாசனம்

பாலம் போஸ் என்றழைக்கப்படும் சேது பந்தாசனம் செய்வது மார்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பை நீட்ட உதவுகிறது. மேலும் வயிற்று உறுப்புகளைத் தூண்டவும், செரிமானத்தை மேம்படுத்த மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவவும் உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த வகை யோகாசனங்களை மேற்கொள்வது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Cortisol: மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்

Image Source: Freepik

Read Next

சர்க்கரை நோயாளிகளே! இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா? - இத ட்ரை பண்ணுங்க!

Disclaimer