Moringa for diabetes: எகிறும் சுகர் லெவலை டக்குனு குறைக்க முருங்கையை இப்படி எடுத்துக்கோங்க

How to take moringa powder for diabetes: நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இதிலிருந்து விடுபட உதவும் எளிய மற்றும் இயற்கையான தீர்வாக சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். அதன் படி, அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முருங்கையை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Moringa for diabetes: எகிறும் சுகர் லெவலை டக்குனு குறைக்க முருங்கையை இப்படி எடுத்துக்கோங்க

Best way to take moringa for diabetic patients: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாகவே நீரிழிவு நோயும் அமைகிறது. குறிப்பாக, நாள்பட்ட உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு ஏற்படலாம். இது இன்சுலின் சரியாகப் பயன்படுத்தாமல் போவதால் ஏற்படக்கூடியதாகும். இது முற்றிலும் குணப்படுத்த முடியாததாக இருப்பினும், அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இதில் டைப் 2 நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இது உடலால் இன்சுலின் பயன்படுத்த முடியாமல் போகும் போது ஏற்படக்கூடியதாகும். இது ஆற்றலுக்காக குளுக்கோஸை உருவாக்குகிறது. வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். இது சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைத் தேர்வு செய்யலாம். இதில் சிறந்த வழிகளில் ஒன்றாக ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்வது அடங்கும். அதன் படி, நீரிழிவுக்கான உணவுமுறைகளில் முருங்கை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் சர்க்கரை நோய்க்கு முருங்கை தரும் நன்மைகளையும், அதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Drumstick leaves benefits: தினமும் இந்த இலை சாப்பிட்டா எல்லா பிரச்சனையும் பறந்து போகும்

நீரிழிவு நோய்க்கு முருங்கை தரும் நன்மைகள்

இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க

இன்சுலின் உணர்திறன் என்பது செல்கள் இன்சுலினுக்கு எவ்வளவு பதிலளிக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஆய்வு ஒன்றில் முருங்கையானது அதிக பிரக்டோஸ் உணவில் தூண்டப்பட்ட இன்சுலின் எதிர்ப்பு மற்றும் மேம்பட்ட டெஸ்டிகுலர் செயல்பாட்டை மாற்றியமைப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

அன்றாட உணவுடன் சேர்த்து முருங்கையை உட்கொள்வது, அந்த உணவுகளின் கிளைசெமிக் பதிலைக் குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், முருங்கை இலைப் பொடியை உணவில் சேர்ப்பது உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பைக் குறைக்கலாம். இதற்கு முருங்கையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மற்றும் பிற உயிரியல் கலவைகளே காரணமாகும்.

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த

ஆய்வு ஒன்றில், இரத்தத்தில் அதிகரிக்கும் குளுக்கோஸ் அளவைக் குறைக்க முருங்கை உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதற்கும் முருங்கை இலை பவுடர் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முருங்கை

ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கும் அதன் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் நீரிழிவு நோய் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை முருங்கை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே காரணமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Moringa leaves: உணவில் முருங்கைகீரையை கட்டாயம் சேர்த்துக்கோங்க.! ஏன் தெரியுமா ?

நீரிழிவு நோயாளிகள் முருங்கையை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

சமையல்

முருங்கையை கீரைகள் அல்லது பிற காய்கறிகளுடன் சேர்த்து சூப்கள், பொரியல்கள் போன்ற பல்வேறு வழிகளில் முருங்கை இலைகளைச் சேர்க்கலாம்.

முருங்கை இலை பவுடர்

அன்றாட உணவில் முருங்கை இலை பொடியை தயிர், பழச்சாறுகள் அல்லது ஸ்மூத்திகள் போன்றவற்றில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மொரிங்கா தேநீர்

முருங்கையை எடுத்துக் கொள்வதன் சிறந்த தேர்வாக முருங்கை தேநீரை எடுத்துக் கொள்ளலாம். இந்த தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். இந்த புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான பானத்தை தயார் செய்வதற்கு, சில உலர்ந்த முருங்கை இலைகளை வெந்நீரில் பல நிமிடங்கள் ஊற வைத்து தயார் செய்யலாம்.

மொரிங்கா சப்ளிமெண்ட்ஸ்

அன்றாட உணவில் முருங்கையைச் சேர்க்க முடியாதவர்கள், சுகாதார வழங்குநரால் பரிந்துரைக்கப்பட்ட மொரிங்கா மாத்திரைகள் அல்லது மொரிங்கா காப்ஸ்யூல்கள் போன்ற சப்ளிமெண்ட்ஸ் வடிவில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கை விதைகள்

சிலர் முருங்கை விதைகளை பச்சையாக சாப்பிட விரும்பினாலும், அதை வறுத்து அல்லது பொடியாக நறுக்கி பானங்கள் அல்லது உணவுகளில் சேர்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் பல்வேறு வழிகளில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Moringa For Diabetes: நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் இதோ! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Milk and diabetes: நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Disclaimer