Is Beetroot Good For Diabetes Patients: நீரிழிவு நோய் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான விஷயங்களில் ஒன்று உணவுக் கட்டுப்பாடு ஆகும். ஏனெனில், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாகவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீரிழிவு நோய் பிரச்சனையை உண்டாக்குகிறது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். உண்மையில் சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையைத் தரும்.
சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா?
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க காய்கறி வகைகளில் ஒன்று பீட்ரூட் ஆகும். இது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எனக் கூறப்படுகிறது. சர்க்கரை நோயைக் குறைக்க உதவும் இயற்கையான வழியாகவே பீட்ரூட் கருதப்படுகிறது. இதில் நீரிழிவு நோய்க்கு பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்
நீரிழிவு நோய்க்கு பீட்ரூட்டின் நன்மைகள்
பீட்ரூட் மண்ணின் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இதற்கு பீட்ரூட்டில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களே காரணமாகும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றம் நீரிழிவு சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. அதன் படி, பீட்ரூட் பீட்டாலைன்கள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் சிறந்த மூலமாகும். இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இவை இரத்த சர்க்கரை அளவுகள் குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். பீட்ரூட் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுப்பொருளாகும். இவை இரத்த சர்க்கரை அளவுகளில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தி, நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த
பொதுவாக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவையும் நிர்ணயிக்க உதவுகிறது. அதன் படி, பீட்ரூட் நார்ச்சத்துக்கான உணவுகளின் மூலமாகும். இவை கார்போஹைட்ரேட்டுகளை செரிமானம் செய்வதுடன், உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இவை சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பயனளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் தண்ணீர். எப்படி தெரியுமா?
தினமும் எவ்வளவு பீட்ரூட் சாப்பிடலாம்?
பீட்ரூட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், அதை மிதமான அளவில் உட்கொள்வது உடலுக்கு நன்மை தரும். அதன் படி, தினந்தோறும் அரை கப் முதல் ஒரு கப் அளவிலான சமைத்த அல்லது பச்சையாக பீட்ரூட்டைச் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக பரிந்துரைக்கப்படவில்லை. உணவில் பீட்ரூட்டைச் சேர்ப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதற்கான வழிகள்
உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ள விரும்பும் சர்க்கரை நோயாளிகள் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
- பீட்ரூட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடும் போது, அதன் சத்துக்கள் உடலுக்குப் பாதுகாப்பாகக் கிடைக்கப் பெறுகிறது.
- சூப் வகைகளாக செய்து சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்தை அதிகரிக்க, ஒல்லியான புரதங்கள் மற்றும் மற்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளுடன் சேர்த்து சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளலாம்.
- பீட்ரூட்டை வறுப்பது அதில் அதிகப்படியான கலோரிகளைச் சேர்க்காமல் சுவையை அதிகரிக்கும். இதில் ஊட்டச்சத்தை அதிகரிக்க, மாவுச்சத்து இல்லாத மற்ற காய்கறிகள் சிலவற்றுடன் இணைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon For Diabetes: சர்க்கரை நோயாளிகளே! இந்த பொக்கிஷத்தை மிஸ் பண்ணீடாதீங்க.
Image Source: Freepik