$
Is Okra Water Good For Diabetes: ஒருவரது உடலில் இரத்த சர்க்கரை ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கான முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறையில் உடல் செயல்பாடுகளைக் குறைப்பதே ஆகும். உடல் செயல்பாட்டில் இல்லாத போது, உடல் பருமன் அதிகரிக்கலாம். இதன் காரணமாக இன்சுலின் அளவு பாதிக்கப்பட்டு, நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க, உணவில் சில தேவையான மாற்றங்களைச் செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஓக்ரா அல்லது லேடிஃபிங்கர் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பது குறித்து உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்கள் பகிர்ந்துள்ளார்.
நீரிழிவு நோயாளிகள் ஓக்ரா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நீரிழிவு நோயாளிகள் லேடிஃபிங்கரை உட்கொள்வதால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். ஓக்ரா அல்லது வெண்டைக்காய் நீரில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதுடன், இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Types 1 Diabetes: டைப் 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் இத ஃபாலோ பண்ணுங்க
குறைந்த கிளைசெமிக் குறியீடு
வெண்டைக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயை விரைவாக முன்னேற விடாமல் தடுக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இன்சுலின் உணர்திறன் மேம்பாட்டிற்கு
வெண்டைக்காயை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இவை இன்சுலின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும் இவை இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையினைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு வகை ஹார்மோன் ஆகும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான கேடசின் மற்றும் குர்செடின் போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலில் அதிகளவு இரத்த சர்க்கரையால் செல்களுக்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதன் வழக்கமான நுகர்வின் உடலின் ஆற்றல் நிலையைப் பராமரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Diabetes Prevention: குழந்தை பருவ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை
அதிக நார்ச்சத்து மிகுந்த
ஓக்ரா அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்ட உணவுப் பொருளாகும். இவை உடலில் கார்போஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்கவும், உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும், இவை உணவிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, இரத்தத்தில் சேர்வதை மெதுவாக்குகிறது. இவை இரத்த சர்க்கரையினை விரைவாக அதிகரிக்காது.

சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் தண்ணீர் அருந்துவது எப்படி? (How to Make Okra Water for Diabetes)
- வெண்டைக்காயை முதலில் நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதை இரண்டு முதல் மூன்று பகுதிகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
- பிறகு, வெண்டைக்காயை பெரிய கொள்கலன் ஒன்றில் வைத்து, அதில் இரண்டு அல்லது மூன்று கப் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- இதை இரவு முழுவதும் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் வெண்டைக்காயை வெளியே எடுத்து தண்ணீரை அருந்தலாம்.
அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளலாம். இந்த சமயத்தில் யோகா, உடற்பயிற்சி போன்ற முயற்சிகளை மேற்கொண்டும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். அதே சமயம், சர்க்கரை அல்லது குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். வெல்லத்தால் செய்யப்பட்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்
Image Source: Freepik