Treatment For Type 1 Diabetes Child: பொதுவாக டைப் 1 நீரிழிவு நோய் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவைக் குறிக்கிறது. குறிப்பாக 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படைவர். இது நாள்பட்ட நிலை மற்றும் நிர்வகிக்க சவாலானதாக இருக்கும். எனினும் நோயின் ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் சரியான வாழ்க்கை முறை சரி செய்தல் போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோயைத் திறம்பட கட்டுப்படுத்தலாம். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோயைத் தடுக்கும் முறை குறித்து பெங்களூர், ஸ்பார்ஷ் மருத்துவமனையின் குழந்தை எண்டோகிரைனாலஜி ஆலோசகர் டாக்டர். தேஜஸ்வி ஷேஷாத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
டைப் 1 நீரிழிவு நோய்
இன்றைய நவீன உலகில், குழந்தைகள் பெரும்பாலும் வெளிப்புற செயல்பாடுகளை இழக்கின்றனர். இது அவர்களின் குறைந்த உடல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த இயக்கமின்மை மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடு, மருந்துகளின் தேவை போன்றவை குழந்தைகளுக்கு நீரிழிவு நோயை உண்டாக்குவதுடன், பெற்றோரின் வாழ்க்கையை கடினமாக்குகிறது. எனினும், நிலையான கண்காணிப்பு, கவனம் மற்றும் பொறுமை போன்றவற்றுடன் இந்த சவால்களை சமாளிக்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்
வகை 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் எளிய வழிகள்
டைப் 1 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் சில எளிய வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி
இன்றைய கால கட்டத்தில், குழந்தைகள் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகும். இதில் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் பயனுள்ளதாக அமையும். மேலும், வழக்கமான உடற்பயிற்சி செய்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இவை இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உதவுகிறது. எனினும், குழந்தைக்கு சிறந்த உடற்பயிற்சி முறையைத் தீர்மானிக்க சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.
ஆரோக்கியமான உணவு
டைப் 1 நீரிழிவு நோயை நிர்வகிக்க சமச்சீர் உணவை மேற்கொள்ள வேண்டும். அதன் படி, சமச்சீர் உணவு, கார்போஹைட்ரேட் நுகர்வு மற்றும் முழு தானியங்கள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுப்பது எளிய சர்க்கரையைக் காட்டிலும் மிக முக்கியமானதாகும். மேலும், ஆரோக்கியமான கொழுப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். வழக்கமான உணவு நேரம் மற்றும் பகுதி கட்டுப்பாடு போன்றவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.
மனஅழுத்த மேலாண்மை
குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோயைக் கையாள்வதற்கு சில வாழ்க்கை முறை கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் சூழல் உருவாகும். இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்த மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, நினைவாற்றல் மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேலும் குழந்தையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கும் பங்களிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Hand Symptoms: உங்க கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது நீரிழிவு நோயாக இருக்கலாம்.
இரத்த சர்க்கரை கண்காணித்தல்
இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமான ஒன்றாகும். இந்த தரவுகளை வைத்து குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பாதுகாப்பாக அமையுமாறு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வழக்கமான சோதனைகள்
உடல்நிலையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மற்றும் சாத்தியமான சிக்கல்களை மதிப்பிட சுகாதார வல்லுநர்களின் வழக்கமான அணுகுதல் தேவையாகும். இதன் மூலம் தேவைக்கேற்ப சிகிச்சைத் திட்டங்களைச் சரி செய்யலாம். மேலும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைபிடிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்றவை நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோயை நிர்வகிக்க உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முறைகளின் மூலம் நிறைவான வாழ்க்கையை நடத்துவது சாத்தியமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்
Image Source: Freepik