சர்க்கரை அளவை சடசடவென கட்டுக்குள் கொண்டு வர இந்த 6 முறைகள ட்ரை பண்ணுங்க...!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது ஜூன் 2023 நிலவரப்படி 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றன. வீட்டிலேயே உணவு மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். 
  • SHARE
  • FOLLOW
சர்க்கரை அளவை சடசடவென கட்டுக்குள் கொண்டு வர இந்த 6 முறைகள ட்ரை பண்ணுங்க...!


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது ஜூன் 2023 நிலவரப்படி 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றன. வீட்டிலேயே உணவு மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். 

தினமும் பாதாம் சாப்பிடுங்கள் :

பாதாமில் புரதம், உணவு நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சுமார் பதினைந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் தினமும் 30 கிராம் பாதாம் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பயணம் செயயும் போது கூட எப்போதும் பாதாம் கையில் வைத்திருங்கள். மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி

முழு தானியங்களை தவிர்க்காதீர்கள்:

முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஸ்டார்ச் உறிஞ்சுதலையும் செரிமானத்தையும் மெதுவாக்குகிறது. குளுக்கோஸ் இரத்தத்தில் மிக மெதுவாக வெளியிடப்படுவதால், இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. முழு தானியங்களில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

வெந்தய தண்ணீர்:

வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வெந்தயம், ஸ்டார்ச் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும். முந்தைய நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

 

 

நெல்லிக்காய் சாறு குடிக்கவும்:

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நெல்லிக்காய் இன்சுலின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதன் மூலமும கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. காய்கறி, ஸ்மூத்தியில் சிறிதளவு நெல்லிக்காய் சாற்றை ஊற்றி உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. குளுக்கோஸை செல்களுக்குள் நுழையும் ஆற்றலாக மாற்றுகிறது. தேநீர், காபி அல்லது ஸ்மூத்தியில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.

பப்பாளி :

பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு பப்பாளி சாறு குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.

இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால், வீட்டிலேயே இந்த வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இந்த உணவுகளை தினசரி பழக்கமாக்குவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Image Source: Freepik

Read Next

டயாபடீஸ் இன்சிபிடஸ் பற்றி தெரியுமா? காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து மருத்துவர் தரும் விளக்கம் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்