குளிர் காலம் வந்துவிட்டாலே நீரழிவு நோயாளிகளுக்கு இயல்பாகவே ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். அதாவது அதிக வெப்பம் அல்லது குளிர் இரண்டுமே ரத்த சர்க்கரையை பாதிக்ககூடியதாகும். குறிப்பாக குளிர் காலத்தில் குறைவான வெப்பநிலை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக, நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது.
இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், இதயம், சிறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், குளிர் காற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது. இதனால் கடுமையான பருவகால நோய்கள் தாக்க வாய்ப்புள்ளன.
முக்கிய கட்டுரைகள்
எனவே குளிர்காலத்தில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உணவு விஷயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நிபுணர்களின் பரிந்துரையின் படி சில அறிவுரைகள் இதோ…
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்:
உயர் இரத்த சர்க்கரை அளவு திசுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இதைத் தடுக்க புரதம் அவசியம். இதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இறைச்சி, மீன் மற்றும் முட்டை, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.இசையும் வலியைக் குறைக்கும்.ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: Stress Eating:ஜாக்கிரதை… மன அழுத்தத்தில் இதைச் செய்தால் கல்லீரல் பாதிக்கப்படும்!
இந்த பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள்:
பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உடலில் உள்ள திசுக்களின் சிதைவைத் தடுக்கிறது. சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இந்த சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சூப்பர்ஃபுட் என அமெரிக்க நீரிழிவு சங்கத்தால் பெர்ரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகம் மற்றும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
இந்த காய்கறிகளை மறக்காதீர்கள்:
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், முள்ளங்கி, பீட்ரூட், கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், பட்டாணி, சோளம் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.
இதையும் படிங்க: Winter Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
கேரட் மற்றும் முள்ளங்கி போன்ற பீட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி, ஈ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அதேபோல், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், அயோடின் போன்ற சத்துக்களும் உடலுக்குத் தரப்படுகின்றன. அவற்றில் உள்ள துத்தநாகம் இன்சுலின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க சூடான டீ மற்றும் காபி அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் காபி,டீ அளவை கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- அரிசி மற்றும் உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவை உயர் கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டுள்ளன.எனவே குளிர்காலத்தில் அவற்றை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
- வெல்லத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உள்ளது. எனவே வெல்லம் சாப்பிட வேண்டாம்.
- குளிர் மற்றும் சோம்பல் காரணமாக இந்த பருவத்தில் உடற்பயிற்சி செய்வது தவிர்க்கப்படுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Image source: Freepik