Food to Control Diabetes: இறைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்கள். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது என்பது தலைவலியாக உள்ளது.
என்ன தான் மருத்து, மாத்திரை, ஊசி போட்டாலும், நாம் சில கவனிப்புகளை மேற்கொண்டால் தான் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சுகர் எகிறிவிடும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

வெந்தயம்
சர்க்கரை நோய்க்கு வெந்தயம் சிறந்த தேர்வாக இருக்கும். வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த தண்ணீருடன் வெந்தயத்தை உட்கொள்ளவும். தினமும் இதனை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கு முடியும். இதனை சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்திற்கு வேறு எந்த உணவும் சாப்பிடக்கூடாது.
கிரீன் டீ
கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன. இது ஒரு வகை ஆன்டி -ஆக்ஸிடன்ட் ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: Diabetes Diet: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 காலை உணவு விருப்பங்கள்
அத்தி இலை
தினமும் வெறும் வயிற்றில் அத்தி இலைகளை மென்று சாப்பிடால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதனை தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும்.
பாகற்காய்

பாகற்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரையின் அளவை குறைக்கவும், இன்சுலின் சிரப்பை சீராக்கவும் உதவுகிறது. தினமும் காலை ஒரு கிளாஸ் பாகற்காய் ஜூஸ் குடிக்கவும். இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.
இலவங்கப்பட்டை
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கடுப்படுத்த இலவங்கப்பட்டை சிறந்த தேர்வாக இருக்கும். இதனை தண்ணீரில் கொதிக்கவைத்து தேநீராக குடிக்கலாம். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
Image Source: Freepik