Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Juices For Diabetes: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த காய்கறி சாறுகளை குடிக்கலாம்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் காய்கறி சாறுகள்

உடலில் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய காய்கறி சாறுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Hand Symptoms: உங்க கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது நீரிழிவு நோயாக இருக்கலாம்.

வெந்தய சாறு

வெந்தய விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிற்றில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆம்லா சாறு

ஆயுர்வேத பண்புகள் நிறைந்த நெல்லிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தருவதாக அமைகிறது. இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆம்லா உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பாகற்காய் சாறு

பாகற்காயில் பாலிபெப்டைட்-பி மற்றும் சரண்டைன் போன்ற கலவை பண்புகள் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரையைக் குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. பாகற்காயில் உள்ள இந்த பண்புகள், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியை குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Green Juice: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கியமான பச்சைச் சாறுகள்

வெள்ளரிக்காய் சாறு

இதில் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

சுரைக்காய் சாறு

சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற தேர்வாக அமைகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும் வைட்டமினகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

தக்காளி சாறு

தக்காளியில் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. சில ஆய்வுகள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் லைகோபீன் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Foot Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய நீரிழிவு பாத நோய் அறிகுறிகள்

கீரை சாறு

கீரையில் மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் செயல்பாட்டை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள், இந்த காய்கறி சாறுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் எடுத்துக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உடல் நலப் பிரச்சனையால் அவதிப்பட்டாலோ புதிய உணவுகளைச் சேர்த்துக் கொள்ளும் முன் சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

Image Source: Freepik

Read Next

Avocado and diabetes: என்னது பட்டர் ஃப்ரூட் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்குமா?

Disclaimer