Hyperglycemia Symptoms And Treatment: நீரிழிவு நோய் செயல்பாட்டால் ஏற்படும் ஒரு நிலையே ஹைப்பர்கிளைசீமியா ஆகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஹைப்பர்கிளைசீமியா எனப்படுகிறது. இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண் பார்வை இழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவர். பொதுவாக இந்த வகை நோயானது உடல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது நிகழ்கிறது.
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, உயர் இரத்த குளுக்கோஸ் அளவே ஹைப்பர் கிளைசீமியா என அழைக்கப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதிக அளவு உணவுகளை உட்கொள்ளுதல், தீவிர மன அழுத்தம் உள்ளிட்டவை ஹைப்பர்கிளைசீமியா நீரிழிவு நோயை ஏற்படுத்துவதற்கான காரனங்களாக அமைகிறது. மேலும், இவை நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத நபர்களையும் பாதிக்கலாம். கணைய சுழற்சி அல்லது கார்டிகோஸ்டீராய்டுகள், ஹைப்பர் தைராய்டிசம் போன்றவற்றின் விளைவாக ஹைப்பர்கிளைசீமியாக ஏற்படலாம். உலக நீரிழிவு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Management: சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட வேண்டும்!
ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள்
உடலில் பல்வேறு முக்கிய அறிகுறிகளை ஏற்படுத்துவதாக ஹைப்பர் கிளைசீமியா உள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
- அதிக தாகம் எடுப்பது
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது
- சோர்வு மற்றும் தலைவலி
- மங்கலான பார்வை
இது தவிர, குமட்டல், வயிற்று வலி, வாந்தி போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படும். இதற்கு மேல் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது நீரிழிவு கெட்டோ அசிடோசிஸூக்கு வழிவகுக்கிறது. இந்த வகை பாதிப்பால், ஒருவர் கோமா அல்லது மரணம் ஏற்படும் தீவிர நிலையும் ஏற்படலாம்.
பொதுவாக உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட நபர்களுக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, இதயம் மற்றும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். இதய நோயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இதனால், இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளும் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஹைப்பர் கிளைசீமியா நோயைக் கண்டறிவது எப்படி?
உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கண்டறிய மருத்துவர் இரத்தப் பரிசோதனை செய்வர். இதன் மூலம் ஹைப்பர் கிளைசீமியா இருப்பதைக் கண்டறியலாம். இந்த ஹைப்பர் கிளைசீமியாவை ஆரம்ப காலத்தில் பரிசோதனை செய்து, உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்து மூலம் ஹைப்பர் கிளைசீமியாவை நிர்வகிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tips for Diabetes : சர்க்கரை நோயாளிகள் ஆர்ட்டிஃபிஷியல் சுகர் உட்கொள்வது நல்லதா?
ஹைப்பர் கிளைசீமியா சிகிச்சை முறைகள்
நீரிழிவு அல்லது பிற அடிப்படை மருத்துவ நிலைமைகளை சரியாக நிர்வகிப்பதன் மூலம் ஹைப்பர் கிளைசீமியாவைத் தடுக்கலாம். மேலும், இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படுதல் போன்றவற்றின் மூலம் ஹைப்பர் கிளைசீமியாவைத் தடுக்க முடியும்.
உணவு நிபுணர் ஸ்வாதி பத்வால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உணவில் ஓட்ஸ், தினை, வெல்லம், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஸ்வாதியின் கூற்றுப்படி, வறுத்த உணவுகளாலும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். எந்த வகையான நீரிழிவு நோய் இருப்பினும் அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், வறுத்த உணவுகள் சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கச் செய்கிறது.
ஹைப்பர்கிளைசீமியா மருத்துவ நிலைக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மிகக் கடுமையான விளைவுகள் ஏற்பட நேரிடும். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இந்த ஹைப்பர் கிளியசீமியாவில் இருந்து விடுபட, அன்றாட வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்வது மற்றும் உணவு முறை மாற்றங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். இந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஹைப்பர்கிளைசீமியாவைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.
Image Source: Freepik