Sat Sep 12, 2026 | 12:59 AM IST

High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.

உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் போது, உணவில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஆனால், இன்சிலின் சுரப்பு குறைவாக இருக்கும் போதோ அல்லது முற்றிலும் இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை உண்டாகும். இதன் விளைவாகவே, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயை உண்டாக்குகிறது. எனவே, சர்க்கரை நோயினை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். இதில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை உணர்த்தக்கூடிய உடலில் ஏற்படும் சில அறிகுறிகளைக் காணலாம்.

உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்

உடலில் இன்சிலின் உற்பத்தி குறைவதாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ விளையக்கூடிய உயர் இரத்த சர்க்கரை நோய்க்கான சில அறிகுறிகளைக் காணலாம்.

மங்கலான பார்வை

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, விழித்திரையின் நாளங்கள் பாதிக்கப்படலாம். இவ்வாறு உயர் இரத்த சர்க்கரை கொண்ட நபர்களுக்கு கண்புரை, மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், இது ரெட்டினோபதி போன்ற கண் சார்ந்த பிரச்சனைகளைத் தருகிறது. இதனால், கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி உணர்திறன் பாதிப்படையும். இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால், பார்வை இழப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகும்.

அதிகமாக தாகம் எடுப்பது

பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் அதிக அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இருப்பினும், ஆரோக்கியமன திரவங்களின் வகைகளில் சர்க்கரை கலந்த் பழச்சாறுகள் அடங்காது. உடல் நிலை பாதிக்காதவாறு, நீரிழிவு நோயாளி அதிக அளவு தண்ணீரை உட்கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல, இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கொண்ட நபர்களுக்கு வழக்கத்திற்கு அதிகமான தாகம் உண்டாகும்.

இந்த பதிவும் உதவலாம்: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

சர்க்கரை நோயாளிகளின் அடுத்த அறிகுறியாக விளங்குவது அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகும். இதற்கு மற்றொரு பெயர் ஹைபர்கிளைசீமியா என்பதாகும். உயர் இரத்த சர்க்கரை கொண்டிருக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழிப்பதை புறக்கணிக்கக் கூடாது. இதற்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது சிறுநீரகத்தின் பணியை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இந்த சமயங்களில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

கால் வலி

உடலில் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதற்கான அறிகுறியாக கால்களில் அதிக வலி ஏற்படும். குறிப்பாக கால் பாதங்களில் வலி உண்டாகலாம். இந்த உயர் இரத்த சர்க்கரை ஏற்படும் போது, பாதங்கள் உணர்வற்று இருக்கும். இதற்கு பாதங்களில் இரத்த ஒட்டம் தடைபடுவதே காரணம் ஆகும். இதன் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படும் போது அது குணமாக்குவதை கடினமாக்குகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கால் துண்டிப்பதற்கும் வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

நரம்பு சேதம்

கண்களில் உள்ள ரெட்டினோபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல, இது நியூரோபதி எனப்படும் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் உணர்வில்லாமல் இருத்தல் அல்லது உணரும் திறன் குறைதல் நிலை உண்டாகும். இவையே கால் புண்கள் ஏற்படுமாயின் அதில் கடுமையான தொற்றுக்களை உண்டாக்குகிறது. இது விரைவில் குணமாகாத ஒன்றாக அமைகிறது.

கிட்னியில் பிரச்சனை

உடலில் மிக முக்கிய பகுதியாக விளங்கும் சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்சுலின் பாதிப்பால் உண்டாகக் கூடிய உயர் இரத்த சர்க்கரை அளவானது சிறுநீரகத்தில் உள்ள இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதுவே நீரிழிவு சிறுநீரக நோய் அல்லது நீரிழிவு நெஃப்ரோபதி என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக வாந்தி, சோர்வு போன்றவையும் ஏற்படலாம்.
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான அறிகுறிகள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

Read Next

Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content