High Cholesterol Signs In Fingers: ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை காரணமாக அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கடுமையான பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். இதனால், தமனிகளில் அடைப்பு பிரச்சனை ஏற்படலாம்.
உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது ஏற்படும் அறிகுறிகளைக் கண்டறிந்து உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது சில அறிகுறிகள் விரல்களில் ஏற்படலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Paneer For Heart Health: இதய நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா? நன்மை, தீமைகள் என்னென்னு பாருங்க.
அதிக கொலஸ்ட்ரால் காரணங்கள்
உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கு முக்கிய காரணம் மது அருந்த்தல், புகைபிடித்தல், அதிகப்படியான பொரித்த உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். இதனால் பல கடுமையான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
ஆனால், சரியான நேரத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தாவிடில் மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் கண்டறிவதன் மூலம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கலாம். பாபு ஈஸ்வர் ஷரன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சமீர் அவர்களின் கூற்றுப்படி, “உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கான அறிகுறிகளை ஆரம்ப கட்டத்தில் இயல்பாகவே இருக்கும். ஆனால், இது முன்னேறும் போது அறிகுறிகளும் தீவிரமடையலாம்” என்று கூறியுள்ளார்.
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக விரல்களில் ஏற்படும் அறிகுறிகள்
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும் போது விரல்களில் சில அறிகுறிகள் தோன்றலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
விரல்கள் மற்றும் கால் விரல்களில் வலி
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வது கை மற்றும் கால்களின் விரல்களில் வலி ஏற்படும். உண்மையில், இவை ஏற்படுவதற்குக் காரணம் தமனிகளில் கொலஸ்ட்ரால் குவிவதே ஆகும். விரல்களின் வலி தொடர்ந்து இருப்பின், அதிக கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கும்.
விரல்களில் கூச்சம் ஏற்படுவது
அதிக கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படலாம். இதனால், விரல்களின் நரம்புகளில் முள் குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். மேலும், நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits For BP: இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்த உலர் பழங்கள் எல்லாம் சாப்பிடுங்க.
விரல்களில் மஞ்சள் நிறம் தோன்றுவது
விரல்களில் மஞ்சள் நிறம் தோன்றுவதும் அதிய கொலஸ்ட்ரால் அறிகுறியாகக் கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சாந்தெலஸ்மாவைப் பெறலாம். இதனால் சருமத்தின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.
விரல்களில் அழுத்தத்தில் வலி
வேலை செய்யும் போது வலி அல்லது விரல்களில் ஏதேனும் அழுத்தம் ஏற்படின், அது அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த சூழ்நிலையைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகமாகலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைப் புறக்கணித்தால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், புகைபிடித்தல் மற்றும் செயலற்ற வாழ்க்கை முறை போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்கலாம். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்தால் மருத்துவரை உடனடியாக அணுகி பயன்பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Attack In Winter: குளிர்காலத்தில் ஷாக் தரும் மாரடைப்பு.. எப்படி தடுக்கலாம்?
Image Source: Freepik