High Blood Pressure In Child Symptoms: உயர் இரத்த அழுத்தம் என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவாக பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஆனால் இது குழந்தைகளையும் தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். குழந்தைகளும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெரியவர்களைப் போலல்லாமல், உயர் இரத்த அழுத்தம் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் இது ஒரு அமைதியான மற்றும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறலாம்.
இதற்கு அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் மிக்க மேலாண்மை தேவைப்படுகிறது. இதில் குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள் நிறைய உள்ளது. இது பெரும்பாலும் மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையதாகும். குழந்தைகளுக்கான உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நீண்ட கால உடல்நலச் சிக்கல்களைத் தடுக்க வழக்கமான மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியம் ஆகும். இதில் குழந்தைகளுக்கான உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pneumonia In Children: குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டியது இது தான்.!
குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அறிகுறிகளைக் காட்டுவதில்லை. எனினும், குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது சில அறிகுறிகளைக் காட்டுகிறது.
- உயர் இரத்த அழுத்தம் குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக உணரலாம்.
- தொடர்ச்சியான அல்லது கடுமையான தலைவலி போன்றவை ஏற்படலாம்.
- சுவாசிப்பதில் சிரமம், குறிப்பாக உடல் செயல்பாடுகளின் போது சுவாசிப்பதில் சிரமம் உண்டாகலாம்.
- உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பார்வைக் கோளாறுகள் ஏற்படலாம்.
- அதிக இரத்த அழுத்த பிரச்சனையால் குழந்தைகளுக்கு தலைசுற்றல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
- மார்பு அசௌகரியம் அல்லது வலி உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தம் இருப்பதற்கான காரணங்கள்
குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. முதன்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என இரு வகைகள் உள்ளன.
முதன்மை உயர் இரத்த அழுத்தம்
- இந்த வகை உயர் இரத்த அழுத்தமானது பெரும்பாலும் மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையதாகும்.
- மரபியல் ரீதியாக உயர் இரத்த அழுத்தத்தின் குடும்ப வரலாறு ஆபத்தை அதிகரிக்கலாம்.
- அதிகளவு உப்பு உட்கொள்ளல், தவறான உணவுப்பழக்கம் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
- அதிகளவு மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம்.
- உட்கார்ந்த வாழ்க்கை முறை உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
- அதிகளவிலான உடல் எடை உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்து காரணியாக செயல்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bedwetting Behavior: குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிர்வகிக்க மருத்துவர் தரும் விளக்கம்
இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்
- இந்த வகை உயர் இரத்த அழுத்தம் பொதுவாக அடிப்படை சுகாதார நிலைமைகளுடன் இணைக்கப்பட்டதாகும்.
- நாள்பட்ட சிறுநீரக நோயால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
- ஹைப்பர் தைராய்டிசம் அல்லது அட்ரீனல் சுரப்பி கோளாறுகள் போன்ற நாளமில்லா கோளாறுகளின் நிலைகள் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம்.
- பிறவியிலேயே இதய குறைபாடு பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை மற்றும் மேலாண்மை முறைகள்
பொதுவாக வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் தேவைப்படும் போது மருந்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகளைக் கண்டறியலாம்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்.
- சர்க்கரை பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
- ஆரோக்கியமான உடல் எடை மற்றும் பராமரிப்பு முறைகளின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தைக் கையாளலாம்.
- உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும் சோடியம் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- போதுமான தூக்கத்தை உறுதி செய்வது மற்றும் தளர்வு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கலாம்.
- சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடவும் மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்யவும் இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.
இவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Cardomom Benefits: குழந்தைகளுக்கு உணவூட்டிய பிறகு ஏலக்காய் கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Image Source: Freepik