Tips To Control High Blood Pressure In Summer: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கங்களால் பல்வேறு நோய்களை சந்திக்கும் சூழல் உண்டாகலாம். அதிலும் பல்வேறு மசாலா மற்றும் பிற உணவுப் பொருள்களில் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம்.
இதனுடன், கூடுதலாக வேலை அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மன அழுத்தங்களால் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இவை நீண்ட காலமாக நீடித்தால் இதய நோய் உள்ளிட்ட அபாயம் ஏற்படலாம். குறிப்பாக கோடைக்காலத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இது குறித்து நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சஞ்சய் மகாஜனிடம் (Sr. Consultant Physician & Intensivist Dr. Sanjay Mahajan, Kailash Hospital, Noida) அவர்கள் கோடைக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Before Swimming Tips: நீச்சலுக்கு செல்லும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்!
கோடைக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான குறிப்புகள்
மன அழுத்தத்தைத் தவிர்த்தல்
பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம், உடலில் பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், ஒருவர் கட்டாயம் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாக அமைவது மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகும். எனவே மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். இதனுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலமும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். அதே போல, தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் கவலை, மன அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
அதிக நீரேற்றம்
கோடைக்காலத்தில் உடலில் வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், தேவையான தாதுக்களையும் தருகிறது. சாதாரண நீரை அதிகம் குடிக்க முடியாவிடில், எலுமிச்சையை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது தவிர, அரிசி தண்ணீர், பருப்பு தண்ணீர், தேங்காய் தண்ணீர் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலுக்குத் தேவையான தாதுப்பொருள்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது. இவ்வாறு கோடைக்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: H5N1 Bird Flu: பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணம்; மக்களை எச்சரிக்கும் WHO!
நல்ல தூக்கம்
நாள்தோறும் போதுமான தூக்கத்தைப் பெறுவது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். ஒருவர் நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இரவு உணவை தூங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் இரவு தூங்குவதற்கு முன்னதாக தொலைக்காட்சி, தொலைபேசி பயன்பாட்டைத் தவிர்ப்பது அவசியமாகும். பல நேரங்களில் அதிக திரை நேரம் காரணமாக தூக்கமின்மை ஏற்படலாம்.
யோகா மற்றும் தியானம்
தினமும் யோகா மற்றும் தியானம் செய்வது மன நிலையை மேம்படுத்துவதுடன் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. யோகா மற்றும் தியானத்தை வழக்கமாக பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஜங்க் ஃபுட்-ஐத் தவிர்ப்பது
கோடைக்காலத்தில் அதிக காரமான மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வதை விரும்புவர். ஆனால், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஜங்க் ஃபுட் போன்றவற்றில் நிறைந்துள்ள எண்ணெய் மற்றும் மசாலாப் பொருள்கள் மட்டுமின்றி உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உப்பும் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கோடைக்காலத்தில் சுத்தமான மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். மேலும் உணவில் முடிந்தவரை காய்கறிகள், பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.
இந்த வகை முறைகளின் மூலம் உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வறுத்த உணவுகள் வேண்டாம்.! இது தான் காரணம்…
Image Source: Freepik