உங்க இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளை தவறாம சாப்பிடுங்க

Foods that can lower your blood pressure: உயர் இரத்த அழுத்தம் குறைய அன்றாட உணவுமுறையில் சில மாற்றங்களைக் கையாளலாம். இதில் அதிகளவிலான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளை தவறாம சாப்பிடுங்க

What to eat to lower blood pressure quickly: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்ற பல்வேறு காரணிகளால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக உடல் எடை அதிகரிப்பும் அடங்கும். இது தவிர, நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றால் பலரும் பாதிப்படைகின்றனர். உண்மையில், உடலில் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் அதிகரிப்பு காரணமாகவே இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு சில ஆதரவான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் மற்றும் எண்டோஸ்கோபிஸ்ட் டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் மனித உடல் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்க சில தடுப்பு நடவடிக்கைகளைத் தனது சமூக ஊடகங்களில் சுகாதார குறிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அவ்வாறு, அவர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய சில உணவுகள் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Low Blood Pressure: உங்களுக்கு லோ பிரஷர் இருக்கா? உடனடி நிவாரணம் பெற இந்த பானங்களை குடியுங்க!

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 5 சிறந்த உணவுகள்

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள் குறித்து டாக்டர் சேதி அவர்கள் அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்பட்டு, அதைக் குறைக்க உதவுவதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த ஒவ்வொரு பொருளிலும் காணப்படும் ஊட்டச்சத்து மதிப்பு இதை சாத்தியமாக்குவதாகக் குறிப்பிட்டார். இதில் அவர் எந்தெந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்போம்.

வாழைப்பழங்கள்

டாக்டர் சேதி அவர்களின் கூற்றுப்படி, வாழைப்பழங்களில் அதிகளவிலான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சிறுநீரகங்களில் அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் ஃபிளவனால்கள் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மருத்துவரின் கூற்றுப்படி, இந்த மக்னீசியம் நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இதற்கிடையில், டார்க் சாக்லேட்டுடன் தேநீர் குடிப்பதும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் முடிவுகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் போலவே இருந்தது. இது மார்ச் 2025 ஆய்வு ஐரோப்பிய தடுப்பு இருதயவியல் இதழில் வெளியிடப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க வாழைப்பழம் உதவுமா? வேறு என்னென்ன உணவுகள் உதவும் தெரியுமா?

பீட்ரூட்

பீட்ரூட்டில் கரிம நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும். இது உடல் நைட்ரஸ் ஆக்சைடாக மாற்றுகிறது என மருத்துவர் சேதி கூறுகிறார்.

மாதுளை

மாதுளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இவை ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதியின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ளது என்று மருத்துவர் சேதி கூறுகிறார்.

இஞ்சி

இறுதியாக, உணவுப்பொருளான இஞ்சி ஒரு இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுகிறது. எனவே இது இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாக அமைகிறது. 

எனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருத்துவர் சேதி பரிந்துரைத்த இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: உங்களுக்கு லோ பிபியா? உடனே அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்.. நிபுணர் சொன்னது

Image Source: Freepik

Read Next

வாழ்க்கை முறை மாற்றங்கள் மாரடைப்பைத் தடுக்க முடியுமா.? மருத்துவரின் விளக்கம்..

Disclaimer