இரத்த அழுத்தத்தைத் திறம்பட குறைக்க இந்த ஐந்து உணவுகளை மட்டும் சாப்பிடுங்க போதும்

Foods that lower your blood pressure instantly: உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், இதன் கரணமாக இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் அபாயங்கள் ஏற்படலாம். இரத்த அழுத்த மேலாண்மையில் உணவுமுறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதில் இரத்த அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்க உதவும் உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இரத்த அழுத்தத்தைத் திறம்பட குறைக்க இந்த ஐந்து உணவுகளை மட்டும் சாப்பிடுங்க போதும்

Foods that lower your blood pressure quickly: உடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிப்பது அவசியமாகும். ஏனெனில் அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களின் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக, இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பலரும் பல வழிகளில் போராடுகின்றனர்.

இதற்கு சில மருந்துகளை நாடி, அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். எனினும், உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இரத்த அழுத்த மேலாண்மையில் சில உணவுகளைச் சேர்ப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆம். உண்மையில், அன்றாட உணவில் சில உணவுமுறைகளைக் கையாள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது குறித்து ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: எகிறும் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க உங்க டயட்ல இந்த மாற்றங்களைச் செய்யுங்க

இரத்த அழுத்தத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

டாக்டர் சேதி அவர்கள் இன்ஸ்டாகிராம் வீடியோவில்,”அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள் இங்கே” என்று பதிவிட்டுள்ளார்.

டார்க் சாக்லேட்

இது மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகளால் நிரம்பியதாகும். இவை இரத்த நாளங்களை விரிவுபடுத்தி சுழற்சியை மேம்படுத்தும் ஒரு மூலக்கூறான நைட்ரிக் ஆக்சைடின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இஹன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். உயர்தர டார்க் சாக்லேட்டின் ஒரு சிறிய அளவு கூட இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்க வழிவகுப்பதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

மாதுளை

“மாதுளை ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழமாகும். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் குறிப்பாக உடலில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் மாதுளை ஆனது ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதியின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது” என்று டாக்டர் சேதி குறிப்பிட்டுள்ளார்.

வாழைப்பழங்கள்

இது ஒரு வசதியான சிற்றுண்டி ஆகும். இதில் அதிகளவிலான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை எளிதில் குறைக்கலாம்.

இஞ்சி

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி, அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு அறியப்பட்டதாகும். அவ்வாறு உணவு அல்லது பானங்களில் இஞ்சியைச் சேர்ப்பது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இஞ்சி ஒரு இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க ஒரு பயனுள்ள கருவியாக அமைகிறது என்று மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: உயர் ரத்த அழுத்தம் இருக்குறவங்க தப்பித் தவறக்கூட இதை செய்யக்கூடாது.. மீறினால் இந்த 3 உறுப்புகளுக்கு ஆபத்து!

பீட்ரூட்

பீட்ரூட் ஆனது அதன் கரிம நைட்ரேட்டுகளால் இரத்த அழுத்தத்தைத் திறம்பட மேம்படுத்த உதவுகிறது. இது உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்ற வழிவகுக்கிறது என்று டாக்டர் சேதி கூறியுள்ளார். பீட்ரூட் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்த அளவீடுகளைக் குறைக்க வழிவகுப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. மேலும், இவை இதய ஆரோக்கியமான உணவில் ஒரு சிறந்த கூடுதல் தேர்வாக அமைகிறது.

அன்றாட உணவில் இந்த ஐந்து உணவுகளையும் சேர்த்துக் கொள்வது உடலில் இரத்த அழுத்தத்தை திறம்படக் குறைக்க உதவுகிறது. மேலும், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது, நன்கு சீரான உணவை உட்கொள்வது மற்றும் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிப்பது போன்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: உங்க இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளை தவறாம சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Liver Detox: கல்லீரல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமா இருக்க இந்த 6 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

Disclaimer