Herbs for blood pressure: எகிறும் உயர் இரத்த அழுத்த அளவை டக்குனு குறைக்க உதவும் மூலிகைகள், மசாலாப் பொருள்கள் இதோ

Which herbs are good for lowering blood pressure: உலகளவில் பலரும் பாதிக்கப்படும் பாதிப்புகளில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தம் அமைகிறது. இந்த உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க அன்றாட உணவில் சீரான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Herbs for blood pressure: எகிறும் உயர் இரத்த அழுத்த அளவை டக்குனு குறைக்க உதவும் மூலிகைகள், மசாலாப் பொருள்கள் இதோ


What natural herb is good for lower blood pressure: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனையும் அடங்கும். அதிலும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் நோயாக உயர் இரத்த அழுத்தம் அமைகிறது. அதாவது உடலில் அதிகரிக்கும் இரத்த அழுத்தம் காரணமாக, பல்வேறு கடுமையான உடல்நல அபாயங்களைச் சந்திக்கும் சூழல் உண்டாகலாம்.

இந்த உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க மக்கள் பலரும் மருத்துவ ஆலோசனை பெறப்பட்ட மருந்துகளை உபயோகிக்கின்றனர். எனினும், அன்றாட உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க முடியும். அதன் படி, சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த அழுத்த அளவைக் குறைப்பதுடன், இயற்கையான ஆதரவைப் பெறலாம். இந்த மூலிகைகள், மசாலாப் பொருள்களை எடுத்துக் கொள்வது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறந்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Fish For Heart: இதய நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? வாரம் இருமுறை மீன் சாப்பிடுவதன் நன்மைகள்!

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மூலிகைகள், மசாலாக்கள்

சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களில் நிறைந்துள்ள ஆரோக்கியமிக்க பண்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பூர்த்தி செய்து, உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள் பல்வேறு ஆரோக்கியமிக்க பண்புகள் நிறைந்த மசாலாப் பொருளாகும். இதில் உள்ள மூலப்பொருளான குர்குமின், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைத் திறம்படக் குறைக்கலாம்.

பூண்டு

அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பூண்டில் வாசோடைலேட்டரி விளைவுகளுக்கு பெயர் பெற்ற அல்லிசின் என்ற கலவை இருப்பதே ஆகும். இந்த பண்புகள் இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. மேலும் இது சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, தமனி சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.

இஞ்சி

இஞ்சியானது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளைத் தளர்த்தவும் உதவுகிறது.

துளசி

ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் துளசியானது யூஜெனோலின் வளமான உள்ளடக்கத்துடன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் படி, உணவில் புதிய துளசியைச் சேர்ப்பது அல்லது தேநீரில் கலந்து குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Seeds for blood pressure: எகிறும் இரத்த அழுத்த அளவை குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய விதைகள் என்னென்ன தெரியுமா?

இலவங்கப்பட்டை

இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடிய சிறந்த மசாலா பொருளாகும். இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் இரத்த நாள விரிவாக்கத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த மசாலாவை உணவில் மிதமான அளவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி இயற்கையாகவே மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும். இது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்தது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

செலரி விதை

செலரி விதைகளிலிருந்து தயார் செய்யப்படும் சாற்றில் உள்ள சேர்மங்கள் டையூரிடிக் ஆகச் செயல்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பருத்தி

ஆரோக்கியமிக்க பண்புகள் நிறைந்த செம்பருத்தியைக் கொண்டு தயார் செய்யப்படும் செம்பருத்தி டீ உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது. இதன் கலவைகள் இரத்த நாளங்களைத் தளர்த்துவதன் மூலம் சில மருந்துகளைப் போல செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Omega 3 for heart health: உங்க இதயம் ஸ்ட்ராங்கா, பாதுகாப்பா இருக்கணுமா? இந்த ஒன்ன மட்டும் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Omega 3 for heart health: உங்க இதயம் ஸ்ட்ராங்கா, பாதுகாப்பா இருக்கணுமா? இந்த ஒன்ன மட்டும் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Disclaimer