Omega 3 for heart health: உங்க இதயம் ஸ்ட்ராங்கா, பாதுகாப்பா இருக்கணுமா? இந்த ஒன்ன மட்டும் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

How do omega 3 fatty acids reduce heart disease: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அன்றாட வாழ்வில் சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். இந்நிலையில் இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெரிதும் உதவுகிறது. இதில் இதயத்தை வலுவாக வைப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தரும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Omega 3 for heart health: உங்க இதயம் ஸ்ட்ராங்கா, பாதுகாப்பா இருக்கணுமா? இந்த ஒன்ன மட்டும் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க


Omega 3 fatty acid benefits for heart health: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பும் அடங்கும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த அதிகரித்த உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உண்டாவதற்கு வழிவகுக்கிறது. இதில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் இளம் வயது முதலே சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதன் காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்நிலையில், இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அதன் படி, இதய ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் இதயத்தை வலுவாக வைத்திருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு இதயம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது. இதில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer: தினமும் கொஞ்சம் வேர்க்கடலை சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறையுமாம்!

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

இந்த அமிலங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகும். சில உணவுகள் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. அவை கொழுப்பு நிறைந்த சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை ஆகும். அதே போல, ஆளிவிதை, வால்நட்ஸ் மற்றும் சியா விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே போதுமான ஒமேகா-3 உட்கொள்வது கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ADHD அறிகுறிகளைக் குறைக்கவும் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் குறைபாட்டைத் தடுக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தரும் நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நன்மை பயக்கும். இது இதய ஆரோக்கியத்தை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காண்போம்.

ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதற்கு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. ஏனெனில், இரத்தத்தில் உள்ள அதிகளவிலான ட்ரைகிளிசரைடுகள் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இன்னும் பிற இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதன் மூலம் இந்த இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கொழுப்பின் அளவை மேம்படுத்துதல்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பு அதிகரிப்பு இதய பிரச்சனைகளுக்குப் பங்ககிக்கிறது. அதே சமயம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது அவசியமாகும். இதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

பொதுவாக, உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த அதிகளவிலான இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த தேர்வாக அமைகிறது. இவை இதய நோய் தொடர்பான அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Omega 3 Fatty Acids: ஒமேகா 3 அமிலங்கள் உள்ள உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும்?

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த அமிலமாகும். இதய நோய்க்கான ஆபத்து காரணிகளில் ஒன்றாக நாள்பட்ட வீக்கம் அமைகிறது. இந்த வீக்கத்தைக் குறைக்க அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உதவுகிறது. இவை உடல் முழுவதும் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

அரித்மியாவைத் தடுக்க

அரித்மியா என்பது இதயத் துடிப்பின் நேரம் அல்லது வடிவத்தில் ஏற்படும் அசாதாரணத்தைக் குறிக்கிறது. இதில் இதயம் மிக வேகமாக, மிக மெதுவாக அல்லது ஒழுங்கற்ற தாளத்தில் துடிப்பது அரித்மியா ஆகும். அரித்மியாவின் அறிகுறியாக இதயம் படபடப்பாக உணரலாம். இந்நிலையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத் தாளத்தை உறுதிப்படுத்தவும், திடீர் இதயத் தடுப்புக்கு வழிவகுக்கும் அரித்மியாவின் வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

இரத்த உறைவைத் தடுப்பதற்கு

இரத்த உறைதல் என்பது இரத்தம் திரவத்திலிருந்து ஜெல் போன்ற நிலைக்கு மாறுதலைக் குறிக்கும் செயல்முறையாகும். இதனால் இரத்தக்கட்டிகள் உருவாகலாம். இந்த இரத்தக் கட்டிகள் உருவக்கம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். இதனைத் தவிர்க்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளுடன், பிற ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை ஒன்றிணைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Fish For Heart: இதய நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? வாரம் இருமுறை மீன் சாப்பிடுவதன் நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Seeds for blood pressure: எகிறும் இரத்த அழுத்த அளவை குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய விதைகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer