What seed is good for blood pressure: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் அடங்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். அவ்வாறே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு எதிரி ஆகும். ஏனெனில் இது இரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாம். எனினும், இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம்.
காய்கறிகள் முதல் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்ற பல்வேறு வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கலாம். அதன் படி, உடலில் சீரான இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சில ஆரோக்கியமான விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எடையிழப்பு மற்றும் மேம்பட்ட செரிமானம் போன்ற பல்வேறு சாத்தியமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உயர் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடிய சில ஆரோக்கியமான விதைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure: நாம் உண்ணும் உணவு இரத்த அழுத்தத்தை பாதிக்குமா? உண்மை இங்கே!
உயர் இரத்த அழுத்தத்தை ஏன் குறைக்க வேண்டும்?
இரத்த ஓட்டத்தால் தமனிகளின் சுவர்களுக்கு எதிராக செலுத்தப்படும் இரத்த அழுத்தம், சரியான சுழற்சியைப் பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் தமனிகளின் சுவர்களில் அதிகப்படியான சக்தியை செலுத்துகிறது. இது தமனிகள் கடினமாகவும் குறுகலாகவும் மாற காரணமாகிறது. இதனால் உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைக்கப்பட்டு இதய செயலிழப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம். இது தவிர, சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகள் எனப்படும் மென்மையான அலகுகளுக்கு சேதத்தை ஏற்படுத்துவதால் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை பிரச்சனைகள் ஏற்படலாம்.
உயர் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும் விதைகள்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் முக்கியமானதாக இருப்பினும், இரத்த அழுத்த மேலாண்மைக்கு சில விதைகளை உட்கொள்ளலாம். இதில் உயர் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவும் விதைகளைக் காணலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில், இதில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். மேலும், வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது இரத்த நாளங்களில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும், மக்னீசியம் இரத்த நாளங்களைத் தளர்த்துகிறது.
எள் விதைகள்
இரத்த அழுத்த மேலாண்மைக்கு எள் விதைகள் மிகவும் முக்கியமானதாகும். ஆராய்ச்சியில், எள் விதைகளில் உள்ள அதிக பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக, இது உயர் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் மெக்னீசியம் மற்றும் லிக்னான்கள் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்க உதவுவதுடன், இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு ஆளி விதை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா.?
சியா விதைகள்
இரத்த அழுத்த மேலாண்மைக்கு சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சியா விதைகளில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது தமனி விறைப்பைக் குறைத்து இரத்தம் எளிதாகப் பாய அனுமதிக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த அளவைக் குறைக்க சியா விதைகளை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். சியா விதைகளுடன் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் நிறைந்துள்ள மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த விதைகளில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியில் ஈடுபடும் அமினோ அமிலம் எல்-அர்ஜினைனும் நிறைந்துள்ளது. இது இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேலும் அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து, ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் லிக்னான்கள் போன்றவை உள்ளது. எனவே இது இரத்த அழுத்தத்தில் நேர்மறையான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
ஆய்வு ஒன்றில், ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலம் அல்லது ALA, ஆனது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்றியான லிக்னான்கள் உள்ளது. கூடுதலாக, இதில் உள்ள அதிக நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Blood pressure: குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் ஏன் அதிகரிக்கிறது கட்டுப்படுத்த என்ன செய்யணும்?
Image Source: Freepik